முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

அரசியல் வாதிகள் தப்பிக்க சாமானிய மக்களிடம்.கெடுபிடி காட்டும் பறக்கும் படைகளின் அட்டகாசம்

 அரசு ஊழியர்கள் எனும் அலுவலர்கள் கையில் முழு அதிகாரம் தந்தால் என்னமா ஆட்டம் போடுவார்கள் என்பதற்கு பறக்கும் படை எனும் பெயரில் சாமானிய மக்களிடமும், ஏழை எளிய வியாபாரிகளிடமும் இவர்கள் நாள்தோறும் காட்டும் அணுகுமுறைகளே சாட்சியங்களாகும். அரசியல்வாதிகளை சுதந்திரமாக பணம் எடுத்துச் செல்ல விட்டு விட்டு வியாபாரம் செய்து வாழும் மக்களைத் தான் பிடிக்கிறார்கள்..!தமிழ்நாட்டிலுள்ள 39 நாடாளுமன்றத்  தொகுதிகளுக்கும் 3 குழுக்கள் வீதம் 702 தேர்தல் பறக்கும் படைக் குழுக்கள் மற்றும் 702 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு. எட்டு மணி நேரம் என்ற அடிப்படையில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்கணிப்புப் பணிகளை மேற்கொள்கின்றனர். இதில், குறிப்பாக அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுப்பதற்காக சிறப்புத் தேர்தல் பறக்கும் படை (Flying Squad Teams), நிலையான கண்காணிப்புக் குழுக்கள் (Static Surveillance Teams) அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கிய ரூபாய்.50,000- பணத்தை விட அதிகமாகப் பணம், நகை அல்லது பொருட்களை ஆவணங்களின்றி எடுத்துச் சென்றால் தான் அதனைப் பறிமுத
சமீபத்திய இடுகைகள்

ஈஷா யோகா மையத்தில் இதுவரை ஆறு பணியாளர்கள் காணவில்லை என காவல் துறைத் தகவல்.

ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையத்தில் இதுவரை ஆறு பணியாளர்கள் காணவில்லை என காவல் துறை நீதிமன்றத்தில் தகவல். சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில், தென்காசி மாவட்டம் குலசேகரபட்டி விவசாயி திருமலை, காணாமல் போன தன்னுடைய சகோதரரை மீட்டு தரக் கோரி ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளதில், ‘என் சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா என்பவர் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 2007-ஆம் ஆண்டு முதல் தன்னார்வலராகய் பணியாற்றிய நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் தேதி, ஈஷா யோகா மையத்திலிருந்து என்னைத் தொலைப்பேசியில் அழைத்து, கணேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளாரா?’ எனக் கேட்டனர். மேலும், 3 நாட்களாக ஈஷா யோகா மைத்துக்கும் அவர் வரவில்லை என்ற தகவலையும் தெரிவித்தனர். அது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 5-ஆம் தேதி ஈஷா யோகா மையத்தின் பொறுப்பாளர் தினேஷ் ராஜா, கோயம்புத்தூர் மாவட்டம் ஆலந்துறை காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் கொடுத்துள்ளார். அந்தப் புகார் மீது வழக்குப் பதிவு செய்த ஆலந்துறை காவல் நிலையத்தில் ஓராண்டு காலமாகியும் அந்த வழக்கில் மந்தமான விசாரணை நடத்துகிறது. எனவே, காவல் துறை விசாரணையைத் துரித

தற்கொலைக்கு முயன்று மருத்துவ சிகிச்சையில் உள்ள ஈரோடு மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி கவலைக்கிடம்

தற்கொலைக்கு முயன்று மருத்துவ சிகிச்சையில் உள்ள ஈரோடு மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் உடல்நிலை மோசமாகியுள்ளதாகவும், அடுத்த 48 மணி நேரத்துக்குப் பின்னர் தான் உடல்நிலை பற்றி எதுவும் கூற முடியுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்த தகவல் வெளியானது. வைகோவின் மதிமுகவைச் சேர்ந்தவர் கணேச மூர்த்தி. மூன்றாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். குறிப்பாக மதிமுக சார்பில் ஈரோட்டில் இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டார். ஈரோடு தொகுதியில் 2009 ஆம் ஆண்டில் வெற்றி பெற்றார். அதன்பிறகு 2014 தேர்தலில் ஈரோடு தொகுதியில் தோல்வியடைந்தார்.இருப்பினும்  2019 தேர்தலில் ஈரோடு தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்டார். மீண்டும் மதிமுக வேட்பாளராக களமிறங்கிய கணேசமூர்த்தி வெற்றி பெற்றார். தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அவரது வயது 77.இந்நிலையில் தான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட அவர் தயாரானார். திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்படுமென நினைத்தார். ஆனால் திமுக கூட்டணியில் ஈரோடுக்குப் பதில் திருச்சி

போதைப்பொருள் கடத்தல் நைஜீரிய நாட்டவர் உட்பட இருவர் கைது

ரூ.15 கோடி மதிப்புள்ள 1.5 கிலோ கோகைன் பறிமுதல்: நைஜீரிய நாட்டவர் உட்பட இருவர் கைது போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான அதன் நடவடிக்கையைத் தொடர்ந்து, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் அதிகாரிகள் இன்று புதுதில்லியில், சுமார் ரூ.15 கோடி மதிப்புள்ள 1.59 கிலோ  கோகைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். ஆப்பிரிக்காவிலிருந்து இந்தோ-நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்கு போதை மருந்துகள் மற்றும் சைக்கோட்ரோபிக் பொருட்கள் கடத்தலில் ஒரு கும்பல் ஈடுபட்டது. ரகசிய உளவுத் தகவலின் அடிப்படையில், பீகாரின் ரக்சவுலில் இருந்து 22.03.2024 அன்று காலை தில்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் ரயிலில் வந்த ஒருவர் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரிடம் நடத்திய சோதனையில் வெள்ளைநிறத் தூள் பொருளைக் கொண்ட வெளிர் மஞ்சள் காப்ஸ்யூல்கள் 92 மீட்கப்பட்டன. என்.டி.பி.எஸ் கள சோதனைக் கருவியைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட மாதிரி சோதனையில் மீட்கப்பட்ட பொருளில் கோக்கைன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் விசாரணையில், புதுதில்லி துவாரகாவில் உள்ள ஒருவருக்கு சரக்கு வழங்கப்பட இருந்தது தெரியவந்தது. விரைவான பின்தொடர்தல் நடவடிக்கையின் விளைவாக, புதுதில்லியின் துவ

புதுச்சேரியில் வேளாண் அறிவியல் மையங்களின் பொன்விழா கொண்டாட்டத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி

புதுச்சேரியில் வேளாண் அறிவியல் மையங்களின் பொன்விழா கொண்டாட்டத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் - வேளாண் அறிவியல் மையங்கள் 2024-ம் ஆண்டில் தங்களுடைய பொன்விழாவைக்  கொண்டாடுகின்றன. இதற்கான முன்னோட்ட நிகழ்ச்சி புதுச்சேரியில் இன்று நடைபெற்றது. 1974-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி புதுச்சேரியில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் மூலம் முதலாவது வேளாண் அறிவியல் மையம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் உரையாற்றிய இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் ஹிமான்ஷு பதக், வேளாண் அறிவியல் மையங்கள் மூலம் ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்கள் நாட்டில் உணவு தானியங்கள் உற்பத்தி மற்றும் தோட்டக்கலை உற்பத்தியை அதிகரிக்க உதவியதாக கூறினார். வேளாண் அறிவியல் மையங்கள் தொழில்நுட்ப மாற்றம், திறன் மேம்பாடு, சந்தைப்படுத்துதலுக்கான தகவல் ஆகியவற்றுக்கான விரிவான கேந்திரமாக சாதாரண விவசாயிகளுக்கு சேவை புரிய வேண்டும் என்று தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்களை தேர்தல் ஆணையம் செய்த பணியிட மாற்றம்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அல்லாத மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர்களை தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்துள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி குஜராத், பஞ்சாப், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் போன்ற தலைமைப் பதவிகளில் பதவி உயர்வால் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் இன்று இடமாற்ற உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் பதவிகளுக்கு  இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டனர். தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் திரு கியானேஷ் குமார், திரு சுக்பீர் சிங் சந்து ஆகியோர் மேற்கொண்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு இம்முடிவு மேற்கொள்ளப்பட்டது. இடமாற்றம் செய்யப்படும் அதிகாரிகள்: 1. குஜராத் - சோட்டா உதய்பூர், அகமதாபாத் கிராமப்புற மாவட்டங்களின் காவல்துறை கண்காணிப்பாளர் 2.  பஞ்சாப் - பதான்கோட், பாசில்கா, ஜலந்தர் கிராமப்புற மற்றும் மலேர்கோட்லா மாவட்டங்களின் சிறப்புக் காவல்துறை கண்காணிப்பாளர். 3. ஒடிசா - தென்கனல் மாவட்ட ஆட்சியர் மற்றும் தியோக

ஊடகங்கள் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியாக இருக்க முடியாது - குடியரசு துணைத்தலைவர்

 ஊடகங்கள் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியாக இருக்க முடியாது - குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயக நாடு என்ற நாட்டின் வளமான வரலாற்றை எடுத்துரைத்த  குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர், "குடியுரிமை திருத்தச் சட்டம் எந்தவொரு இந்தியக் குடிமகனின் குடியுரிமையையும் பறிக்காது" என்று உறுதிபட தெரிவித்தார்.  அண்டை நாடுகளில் துன்புறுத்தப்பட்ட மதச் சிறுபான்மையினருக்கு நிவாரணம் வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். 'என்டிடிவி  இந்தியா ஆஃப் தி இயர் விருதுகள் 2023-2024' நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர், நமது அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மை, சமத்துவம், நீதி ஆகியவற்றின் மதிப்புகளால் வழிநடத்தப்படும் சிஏஏ போன்ற நடவடிக்கைகளின் நல்ல  தாக்கத்தை சில பிரிவினர் உணரத் தவறியது குறித்துத் தனது வேதனையை வெளிப்படுத்தினார். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகங்களின் பங்கினை அங்கீகரித்த குடியரசு துணைத்தலைவர், சுதந்திரமான, ந