முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வேளாண் விளைபொருட்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் ஊக்கத்தொகை விவரங்கள்

        வேளாண் விளை பொருட்கள் விலை உயர்வும் கொள்முதல் நிலவரமும் 
 உணவு தானியங்களின் தொடர் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்களை வெகுவாக பாதிக்கச் செய்துள்ளது. மறுபுறம் உணவு தானியங்களின் விலை உயர்வை பற்றி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் கேள்விகள், தொடர் நடவடிக்கைகள் பற்றிய விவாதம் தொடர்ந்து நடைபெறும் போது மத்திய வேளாண் மற்றும் நிதி அமைச்சகங்கள் பல்வேறு வகையான அறிவுப்புகள் செய்து வேளாண் விளைப்பொருட்களின் கடுமையான விலை உயர்வை  சிறு மற்றும் குறு விவசாயிகளின் பொருளாதார நலன்களை பாதுகாக்கவும், வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், வேளாண் பொருட்களின் தொடர் விலை உயர்வு மற்றும்  உயர்ந்து வரும் நடைமுறை செலவுகளை ஈடு செய்யவும்  வேளாண் விளைப் பொருட்களுக்கு குறைந்தளவு கொள்முதல் விலையை அதிகரிக்க விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் உயர்த்துவது ஒரு நடைமுறை உண்டு  கடந்த நாட்களில்  கூட கரும்பின் கொள்முதல் குறித்த மத்திய அரசின் அறிவிப்பு கரும்புக் கொள்முதல் விலை பற்றிய கொள்கையை, நடைமுறையை மாற்றி அறிவிக்கச் செய்தனர். இத்தகைய நடைமுறை சூழலில் விவசாயிகளின் நலன்கள் மற்றும் தொடர் பொருளாதாரத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயம் செய்யப்படும் குறைந்தபட்ச விற்பனை விலையை காரணம் காட்டி மத்திய அரசு உணவு தானியங்களின் விலை உயர்வை நியாயப்படுத்துவது ஒரு மிகப் பெரிய மோசடியாகும். மறுபுறம் மத்திய அரசின் குறைந்தபட்ச விற்பனை விலை உயர்வை புள்ளி விபரமாக பதிவுகள் செய்வதில் 
வேளாண்  கொள்முதல் விலை   கொள்முதல் விலை
விளைபொருட்கள்     2008-09 2009-10 ம் ஆண்டுகளில்


நெல் 850 950 கோதுமை 1080 1100 மக்காச்சோளம் 750 840 ராகி 915 915 சோளம் 840 840


கரும்பு 840 840 நிலக்கடலை 2100 2100 உளுந்துப்பயிறு 2520 2520 சோயா 1850 1850 பச்சைப்பயிறு 2520 2760 துவரம்பருப்பு 2000 2300 பருத்தி 3000 3000 ஆகும் 
 2009 ல் மத்திய மற்றும்  மாநில அரசுகள், வேளாண் அமைச்சகம், பல பொருளாதார அமைப்புகள் பல ஆய்வுகள், சந்தை நிலவரத்தை  அடிப்படையாகக் கொண்டு தான் குறைந்தளவு விற்பனை விலை நமது நாட்டில் நிர்ணயம் செய்யப்பட்டது. விவசாயிகளின் அதிகப்படியான இடுபொருள் விலை உயர்வு, மற்றும் நடைமுறை சூழலை அடிப்படையாகக் கொண்டு குறைந்தளவு விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்ற விவசாய சங்கங்களின் கருத்தில் கொண்டு சில சமயங்களில் கடுமையான உற்பத்தி இழப்புகள் மற்றும் சாகுபடி பரப்பளவு வெகுவாகக் குறைவதை கருத்தில் கொண்டும் மத்திய அரசு விலை நிர்ணயம் செய்கிறது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு வருடமாக மிகக் குறைந்தளவு மட்டும் குறைந்தபட்ச கொள்முதல் விலை உயர்வும் செய்யப்பட்டுள்ளது. ஒரு குவிண்டால் என்ற அளவில் பார்க்கும் போது ஒரு ரூபாய் என்ற அளவில் மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளது.  சில விவசாய விளைபொருட்களின் கொள்முதல் விலை உயர்த்தப்படவே இல்லை  குறிப்பாக நீர்ப்பாசனம் குறைந்த நிலங்களில் சாகுபடி செய்யப்படும் ராகி, சோளம், கம்பு, மானாவாரி உளுந்து, நிலக்கடலை, சோயா போன்ற வேளாண் பொருட்களின் கொள்முதல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. நாட்டில் பருத்தி சாகுபடி பிரச்சனையில் பல்லாயிரம் விவசாயிகள் மாண்ட போதும் குறைந்தபட்ச கொள்முதல் விலை கடந்த ஒரு வருடமாக உயர்த்தப்படவில்லை. பச்சைப்பயிறு மற்றும் துவரம்பருப்பின் கொள்முதல் விலை அதிகப்படியாக உயர்த்தப்பட்டாலும், சந்தையில் விவசாயிகள் குறைந்தபட்ச கொள்முதல் விலையை விட பச்சைப்பயிரில் 2008-2009ஆம் ஆண்டில் 2900ரூபாய் என்ற அளவிலும், 2008-2009ஆம் ஆண்டில் 4600 ரூபாய் என்ற அளவிலும், 2009-2010ஆம் ஆண்டில் 4600 ரூபாய் என்ற அளவில் இருந்தால் விவசாயிகளுக்கு எந்தவித பயனும் இல்லை. இதேபோன்ற நிலைதான் துவரம் பருப்பு விற்பனையிலும் காணப்பட்டது. 2008-2009ஆம் ஆண்டில் 4000 ரூ என்ற அளவிலும், 2009-2010ம் ஆண்டில் 4600 ரூ வரை விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையிலும் பயன் இல்லை. இத்தகைய  நடைமுறை சூழலில் தற்போதைய உணவு தானியங்களின் தொடர் விலை உயர்வு உணவு தானியங்களின் கொள்முதல் விலை உயர்வே காரணம் என்ற  மத்திய  நிதி அமைச்சரின் கருத்தும் என்பதும் தற்போதைய விலை உயர்வுக்கு உரிய உண்மையான காரணங்கள் கண்டு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வேளாண் விளை பொருட்களின் விலை உயர்வு – பிற உண்மை காரணங்கள்
மத்திய மற்றும் மாநில அரசுகள் வேளாண் சந்தையில் தனியார் பெரும் நிறுவனங்களை சந்தைப்படுத்தும் முயற்சியில் கடந்த சில ஆண்டுகளாக புதிய பொருளாதாரக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு செயல்பட அனுமதித்தது.  இத்தகைய சூழலில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் குறைந்தபட்ச விலையை விட அதிகமாக வழங்கி பல ஆயிரம் டன்கள் உணவு தானியங்களை நேரடியாக கொள்முதல் செய்து  இந்தியா உணவுச் சந்தைகளில் கடந்த பல ஆண்டுகளாக, வேளாண்மை பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மையங்கள் வேளாண்மை உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் பெருக்கத்தில் அதிகளவு முனைப்புடன் செயல்பட்டு பல புதிய ரகங்களை அறிமுகம் செய்து வேளாண்மை உற்பத்தியை வெகுவாகப் பெருக்கியது. ஆனால் வேளாண் விளைபொருட்களை சந்தைப் படுத்துவதிலும், மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதிலும் போதிய கட்டமைப்பு வசதிகள், போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்த முடியாமல் கெட்டுப் போய்விடும் சூழல்  இத்தகைய நிலை மாற்றப்பட்டு ஏழை மற்றும் நடுத்தர மக்களின் உணவு மற்றும் புரதத் தேவையை நிறைவு செய்ய மத்திய மற்றும் மாநிலத் தொடர் விற்பனை மற்றும் விரிவாக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
இறுதியாக, தற்போதைய தொழில் வளர்ச்சி மற்றும் வர்த்தகக் கொள்கையை மையமாகக் கொண்டு பல நல்ல பாசன வசதியுடைய வேளாண் விளை நிலங்களை கையகப்படுத்தி குறைந்த மானிய விலையில், அதிகளவு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் பல தலைமுறைகளாக கிராமங்களில் வாழ்ந்த மக்களின் நிலங்களை, வாழ்வுரிமைகளை தொழில் வளர்ச்சி என்ற பெயரில்  மாற்றுவதால் உணவு தானியங்கள் பற்றாக்குறை செயற்கையாக  ஏற்பட்டு வருகிறது.
மாற்று செயல்திட்டங்களும், நடைமுறைகளும்
உணவு தானியங்கள் கொள்முதல் மற்றும் விற்பனையில் தனியார் வேளாண் நிறுவனங்களுக்கு போதிய அளவில் கட்டுப்பாடுகள்  விதிக்க வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொதுத்துறை உணவு தேவைகளுக்கு போக மிகுதியான உணவு உற்பத்தி காணப்பட்டால் மட்டுமே தனியார் வேளாண் நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும், உணவு தானியக்குறைபாடு மற்றும் பற்றாக்குறை காலங்களில் தனியார் வேளாண் நிறுவனங்கள் பல ஆயிரம் டன்கள் உணவு தானியங்களை வாங்கி, சில்லறை மற்றும் மொத்த சந்தையில் விற்பனை செய்வதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.
நமது நாட்டில் உணவு தானியங்கள், மற்றும் பிற உணவுப் பொருட்களின் போதிய உற்பத்தி, விளைச்சல் இல்லாத போது கட்டாயமாக உணவு ஏற்றுமதியை செய்ய வேளாண் நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது.
நமது நாட்டில் போதிய உணவு பதப்படுத்தும் மற்றும் மதிப்பு கூட்டும் வசதிகள் இல்லாத காரணத்தால் பல கோடி மதிப்புள்ள உணவு தானியங்கள் மற்றும் வேளாண் பொருட்கள் கெட்டுப்போய் விடுகிறது. இந்த நிலை தவிர்க்க மத்திய அரசு நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் உணவு பதப்படுத்தும் மற்றும் மதிப்புக்கூட்டும் கூடங்களை அமைக்க வேண்டியது அவசியம். படித்த, பட்டதாரி கிராம இளைஞர்கள், சுயஉதவிக்குழுக்களுக்கு போதிய கடன் உதவி மற்றும் பயிற்சிகள் வழங்கி விவசாயிகளின் விளைபொருட்களை நல்ல முறையில் பயன்படுத்தி உற்பத்தி இழப்புகளை பெருமளவில் தடுக்க வேண்டியது அவசியம். தமிழகத்தில் இயங்கும் அனைத்து உழவர் சந்தைகளில் சுயஉதவிக்குழுக்கள் வாயிலாக குளிர்பதன அறைகள், மதிப்புக்கூட்டும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.       தற்போது தொழில்வளர்ச்சியில் உழவர்களின் விளை நிலங்கள்  சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தொழிற்சாலைகள் அமைவதும், பிற்படுத்தப்பட்ட வறண்ட பகுதிகளில் தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பை பெருக்கும் முயற்சியில் புதிய தொழில் கொள்கைகள்,  நடைமுறைகளை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிற நிலையில் தற்போதுவேளாண் விளைபொருட்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் ஊக்கத்தொகை பயனுள்ளதாக அமைய வாய்ப்பு உண்டு


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...