முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காலஞ்சென்ற அன்பழகனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் பிரசாந்த்கிஷோர்

            பேராசிரியர்  அன்பழகனுக்கு அஞ்சலி செலுத்த. பிரசாந்த் கிஷோர் வந்தது பலரும் புருவம் உயர்த்தி பார்க்கும் நிலை  அகில இந்திய அளவில்  அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல்  வியூகம் அமைத்துத் தருவதில் பிரபலமானவர் பிரசாந்த் கிஷோர். இவரது ‘ஐ பேக்’  நிறுவனம் அரசியல் கட்சி தலைவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்று வியூகங்களை வகுத்து தரும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் கமல்ஹாசனும் பிரசாந்த் கிஷோரை அணுகினார். அவரும் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்ற சம்மதித்தார்.
தனது நிறுவனத்துக்காக 150-க்கு மேற்பட்ட இளைஞர்களை பணிக்கு எடுத்து அவர்கள் மூலமாக இதற்கான பணிகளை தொடங்கினார். கிஷோரின் ஆலோசனைப்படி கட்சியில் பல மாற்றங்கள் நடந்தன. கடந்த பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் பிரசாரமும் வியூகங்களும் எடுபட்டன. கணிசமான வாக்குகளைப் பெற்றார்.
தி.மு.க.வுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை ஆலோசகராக பணியாற்றி வந்தவர் சுனில். அவர் தலைமையிலான குழு நமக்கு நாமே பிரசார பயணம் தொடங்கி, தி.மு.க.வின் தேர்தல் பிரச்சார யுக்தி மற்றும் ஸ்டாலினை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தது.
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. 38 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு அவரது பங்கும் முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. ஆனால், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. அடைந்த தோல்விக்கு பிறகு சுனில் மீதான நம்பிக்கை குறைந்து போனதால் சுனில் நீக்கப்பட்டார்.
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., ரஜினி, வியூகத்தை எதிர்கொள்ள தி.மு.க. தயாராகி வருகிறது. இதையடுத்து பிரசாந்த் கிஷோருடன் இணைந்து செயல்பட தி.மு.க. முடிவு செய்து இதனை மு.க.ஸ்டாலின் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், 2021 சட்டசபை தேர்தலுக்காக ஐபேக் அமைப்பில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த அறிவார்ந்த மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட இளம் திறமையாளர்கள் எங்களுடன் பணியாற்ற உள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் என்று கூறினார்
அத்துடன், நம்முடைய திட்டங்களை தமிழகத்தில் நிலைநிறுத்தி மீண்டும் மாநிலத்தில் முன்பிருந்த பெருமையை நிலைநாட்ட உதவுவார்கள்” என பதிவிட்டுள்ளார். இதற்கு ஐபேக் நிறுவனம் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளது.
பிரசாந்த் கிஷோர் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியுடன் பணியாற்றியதால் அவர் முதல்வராக பதவிக்கு வந்தார். தி.மு.க.வுடன் பிரசாந்த் கிஷோர் கை கோர்த்துள்ளது அந்த கட்சி தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரசாந்த் கிஷோருடன் இணைந்ததற்கு கட்சியில் ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளது. பெரியார் கொள்கைகளை மூலதனமாக கொண்ட ஒரு கட்சிக்கு கார்ப்பரேட் நிறுவனத்தின் உதவி தேவையா என்ற வாதம் எதிர்ப்பாளர்களால் வைக்கப்படுகிறது.
மற்றொரு பக்கம், அரசியல் எதிரிகள் பலம் மிக்கவர்களாக மாறி வருவதால், அதை சமாளிக்க சரியான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. ஆதரவாளர்களால் சொல்லப்படுகிறது.
2014 ம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு மாபெரும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடித்தபோது பிரசாந்த் கிஷோர் பெயர் பிரபலமாக அடிபட தொடங்கியது.
அந்த வெற்றியில் பா.ஜனதா வெற்றிக்கு உழைத்த பிரசாந்த் கிஷோர் அணியின் பங்களிப்பு கணிசமாக இருந்ததாக கூறப்பட்டது. 2015ம் ஆண்டு நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி கிஷோர் உதவியை நாடியது. அந்த அணிக்காக பணியாற்றிய போது ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் பிரசாந்த் கிஷோர் தன்னை இணைத்து கொண்டார். இதற்கு நடுவே மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காகவும், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்காகவும் வியூகம் வகுத்துக் கொடுத்தார்.
2021ம் ஆண்டு எப்படி யாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று கடும் முயற்சியை எடுத்து வரக்கூடிய ஸ்டாலினுக்கு, பிரசாந்த் கிஷோர் பக்கபலமாக இருப்பார் என்பதே தி.மு.க.வினரின் நம்பிக்கை.
தி.மு.க.வுக்கு மக்களிடம் எந்தெந்த பகுதிகளில் செல்வாக்கு இருக்கிறது, எங்கே பலவீனமாக இருக்கிறது, கட்சியின் செல்வாக்கை முடிவு செய்யும் தனிப்பட்ட நபர்கள் யார், கட்சியின் செல்வாக்கை காலி பண்ணும் தனிப்பட்ட நபர்கள் யார், யாரை சேர்த்தால் கட்சி வளரும், யாரை ஒதுக்கிவைத்தால் கட்சி ஜெயிக்கும் என்பன போன்ற பல்வேறு நிலவரத்தை தனது ஆய்வாளர்கள் மூலம் அறிந்துகொள்ள பிரசாந்த் கிஷோர் திட்டமிட்டுள்ளார்.
அதன்படியே களத்துக்கு ஏற்ப உத்திகளை வகுக்கிறார். பிரசாந்த் கிஷோரின் வருகையால் இன்னும் சில நாட்களில் தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கும் நிலை


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...