லாலு பிரசாத் யாதவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் தகவல்

லாலு பிரசாத் யாதவின் சிறுநீரகச் செயல்பாடு எந்த நேரத்திலும் மோசமடையக்கூடும். கணிப்பது கடினம்.

இது வெளிப்படையாக ஆபத்தானது, நான் அதை அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்துள்ளேன் என ராஜேந்திர மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்


டாக்டர் உமேஷ் பிரசாத். ராஞ்சியிலிருந்து தகவல் .நலம்பெற பல தலைவர்களும் கருத்து. பாட்னா பல்கலைக்கழகத்தின் பிஎன் கல்லூரியில் சட்டப்படிப்பு மற்றும் அரசியல் அறிவியலில் முதுகலை படிப்பை முடித்த பின்னர், பாட்னாவில் உள்ள பீகார் கால்நடை கல்லூரியில் எழுத்தராக பணியாற்றினார் லாலு. இவரின் உடன்பிறந்தவர்கள் மொத்தம் 6 பேர். அதில் லாலுவின் மூத்த சகோதரர் அதே கல்லூரியில் அலுவலக உதவியாளராக இருந்தார். லாலு, ராப்ரி தம்பதிக்கு 2 மகன்கள் மற்றும் 7 மகள்கள் என மொத்தம் 9 குழந்தைகள். கால்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கபடி, பூப்பந்து மற்றும் இதர உள் அரங்க விளையாட்டுகளில் இவருக்கு ஆர்வம் அதிகம். 2001ல் பீகார் கிரிக்கெட் அசோசியேசனின் தலைவராக இருந்த லாலு, சாப்ரா மற்றும் பாட்னா ஸ்போர்ட்ஸ் கிளப்களிலும் உள்ளார். 23 செப்டம்பர் 1990 அன்று, அயோத்திக்கு ராம் ரத யாத்திரை மேற்கொண்ட எல்.கே அத்வானியை கைது செய்து, தன்னை மதச்சார்பற்ற தலைவராக அடையாளப்படுத்திக்கொண்டார்.

லாலுவிற்கு எதிரான முக்கிய வழக்குகள்

முதலாவது 1998 சொத்துகுவிப்பு வழக்கு

இரண்டாவது  1996 தீவன ஊழல் - தியோகர் கருவூலத்தில் இருந்து ரூ89.27 லட்சம் கையாடல் செய்ததாக 2வது வழக்கு : 2017ல் தண்டனை

மூன்றாநதாக 1996 தீவன ஊழல் - சாய்பாசா கருவூலத்தில் இருந்து ரூ35.62 கோடி கையாடல் செய்ததாக 3வது வழக்கு : 2018ல் தண்டனை

நான்காவது 1996 தீவன ஊழல் - தும்கா கருவூலத்தில் இருந்து ரூ3.97 கோடி கையாடல் செய்ததாக 4வது வழக்கு : 2018ல் தண்டனை

ஐந்அவது 1996 தீவன ஊழல் - டொரன்டா கருவூலத்தில் இருந்து ரூ184கோடி கையாடல் செய்ததாக 5வது வழக்கு : நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது

ஆறாவது 2005 இந்திய இரயில்வே ஒப்பந்த ஊழல் : லாலு குடும்பத்தின் மீது சிபிஐ வழக்கு பதிவு

ஏழாவதாக 2017 - டிலைட் ப்ராபர்டிஸ் ரூ45 கோடி பினாமி சொத்து குவிப்பு மற்றும் வரி ஏய்ப்பு வழக்குகள்: லாலு குடும்பத்தின் மீது வழக்கு பதிவு

எட்டாவதாக 2017 - ஏபி எக்ஸ்போர்ட்ஸ் ரூ40கோடி பினாமி சொத்து குவிப்பு மற்றும் வரி ஏய்ப்பு வழக்குகள்: லாலு குடும்பத்தின் மீது சிபிஐ வழக்கு பதிவு

ஒன்பதாவதாக 2017 ல்

பாட்னா பூங்கா மண் ஊழல், லாலு மற்றும் அவரது இரு மகன்களான தேஜ் பிரதாப் மற்றும் தேஜஸ்வி யாதவ் மீது எழுந்தது. தேஜ் பிரதாப்-ன் மோர் மால் கட்டுமானத்தின் அடித்தள மண்ணை விற்றதாக மூன்று பேர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

ஏபி எக்ஸ்போர்ட்ஸ் மூலம் ரூ40கோடி பினாமி சொத்து குவிப்பு மற்றும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு காரணமாக லாலு குடும்பத்தின் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி 81 தொகுதிகளில் வெற்றி பெற்று பீகார் சட்டமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஐக்கிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்து , நிதீஸ் குமார் பீகாரின் முதலமைச்சர் ஆனார். ஆனால் இக்கூட்டணி ஜூலை 2017ல் முறிவடைந்தது.

2014 பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை எனினும், தனது கட்சி வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனாலும் 4 தொகுதிகளில் மட்டுமே அவரது கட்சி வெற்றி பெற்றது.

மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் பல ஆண்டு காலம் பிரிக்கப்படாத பீகாரின் சக்தி வாய்ந்த தலைவராக இருந்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா