தேசிய கீதத்தைத் திருத்த பிரதமருக்கு பாஜக மூத்த தலைவர் டாக்டர் சுவாமி கோரிக்கைதேசிய கீதத்தைத் திருத்த வேண்டுமென பாஜக மூத்த தலைவ
ரும் முன்னால் சட்ட அமைச்சரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.  ‘தேசியக் கீதத்தில் தற்போதுள்ள சில வரிகளை நீக்க வேண்டுமெனப் பிரதமருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். அதில், ரவீந்தரநாத் தாகூர் இயற்றி அறுபதாண்டுகளுக்கு மேலாக மக்கள் பாடிவரும் ’’ஜன கண மன’’ என்ற தேசியக் கீதத்தில் உள்ள சிலவரிகளை மாற்றி விட்டு, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவம் கடந்த 1943 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி சுதந்திரப் பிரகடனம் செய்த பின் பாடிய பாடலின் வரிகளைச் சேர்க்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார்.முன் வரலாற்றுச் சுருக்கம்: 1911 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி முதன்முதலாக கொல்கத்தா நகரில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில்  பாடப்பட்டது. இரவீந்திரநாத்தாகூரின் உறவினரான சரளாதேவி சௌதுராணி இந்தப் பாடலைப் பாடினார்.

1950 ஆம் ஆண்டு ஜனவரியில் தான் "ஜன கன மண' இந்தியாவின் தேசிய கீதமாகவும் "வந்தேமாதரம்' தேசியப் பாடலாகவும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் இராசேந்திர பிரசாத்தால் அறிவிக்கப்பட்டது. இந்திய தேசிய ராணுவத்தில் நேதாஜி சுபாஸ்சந்திரபோஸ் 

1941 இல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பைத் தொடங்கி, ஆசாத்ஹிந்த் என்ற வானொலிச் சேவை உருவாக்கி, விடுதலை தாகத்தை, அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கெனத் தனிக் கொடியை உருவாக்கி ஜன கண மன பாடலை தேசிய கீதமாகவும்  அறிவித்தார். அதைத் தான் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி தனது கோரிக்கையாக வைத்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா