காதல் திருமணம் செய்து விவாகரத்து கேட்ட பெண் ஆசிரியை கொலை இராமநாதபுரம் திகில்
காதல் திருமணமாகி விவகாரத்து கேட்ட வழக்கில் ஆஜராகித் திரும்பிய  ஆசிரியை, கணவனால் வெட்டிப்படு கொலை  இராமநாதபுரம் திகில் இராமநாதபுரம் மாவட்டம் சக்கந்தியான் வலசை  சரவணன். வாகன ஓட்டுநர் பரமக்குடியில் வசிப்பவருக்கும் ராமநாதபுரம் தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றும் சிவபாலா (வயது 32) என்பவரும் சில ஆண்டுக்கு முன் காதலித்துத் திருமணம் செய்தவர்களுக்கு இரண்டு பெண் உள்ளிட்ட மூன்று  குழந்தைகள் உள்ள நிலையில் சந்தேகம் உள்ளிட்ட பிரச்சினைகளால் அடிக்கடி  இருவருக்குமிடையே மனக்கசப்பு ஏற்படவே  சிவபாலா  கணவரிடம்  விவகாரத்துக் கோரியுள்ளார். இந்த வழக்கு இராமநாதபுரம் குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்த நிலையில் நேற்றுக் காலை  இராமநாதபுரம் நீதிமன்றத்தில்  விசாரணைக்கு சிவபாலா சென்று விசாரணை முடிந்து  அங்கிருந்து ஹாக்கி விளையாட்டு மைதானம் வழியாக வந்து கொண்டிருந்தபோது அவரைப் பின் தொடர்ந்து வந்த சரவணன்,  கொண்டு வந்த அரிவாளால் சிவபாலாவை சரமரியாக வெட்டி விட்டுத் தப்பி ஓடினார். உயிரிழந்த சிவபாலாவின் அலறல் சப்தம் கேட்ட பகுதியில் சென்றவர்கள் ஓடிய சரவணனை மடக்கிப் பிடித்தனர்.  தகவலறிந்த இராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலைய காவல்துறை  சரவணனைக் கைது செய்து, கொலைக் கருவியான அரிவாளைக் கைபற்றி உயிரிழந்த சிவபாலாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த கொடூர சம்பவம் நடந்த இடத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல்துறையினர் பார்வையிட்டனர். காவல் துறை மாவட்டத் தலைமை அலுவலகங்கள், நீதிமன்றம், விளையாட்டு அரங்கம் ஆகியன உள்ள  பகுதியில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பலரை  அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா