சென்னை சுற்றுச்சூழல்துறை கண்காணிப்பாளர் வீட்டில் கோடிக்கணக்கான ரூபாயும், நகைகளும் கைப்பற்றப்பட்டன,

சென்னை சுற்றுச்சூழல்துறை கண்காணிப்பாளர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கோடிக்கணக்கான ரூபாயும், நகைகளும் கைப்பற்றப்பட்டன,


சென்னை பனகல் மாளிகையில் செயல்பட்டுவரும் சுற்றுச்சூழல் துறைக் கண்காணிப்பாளர் பாண்டியன்  அலுவலகத்தில் திங்கட்கிழமை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறை சென்னை சிறப்புப் பிரிவு  நடத்திய சோதனையில், கணக்கில் வராத தொகை 88,500 ரூபாயும்,  வங்கியின் கணக்குப் புத்தகமும்  கிடைத்தது. அந்தக் கணக்கில் 38,66,220 ரூபாய் இருப்பு இருந்தது தெரியவே.  பாண்டியன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டு அவரது வீடு சோதனைக்குள்ளாக்கப்பட்டதில் ரொக்கமாக ஒரு கோடியே 37 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டது. மேலும் 1.22 கோடி ரூபாய் மதிப்புள்ள 3.081 கிலோ தங்கம், 1.51 லட்ச ரூபாய் மதிப்புள்ள 3343 கிராம் வெள்ளி, 5.40 லட்ச ரூபாய் மதிப்புள்ள 10.52 காரட் வைரம், 7 கோடி ரூபாய் மதிப்புள்ள 18 சொத்துகளுக்கான பத்திரங்கள், நிரந்தர வைப்பு நிதியில் 37 லட்ச ரூபாய், ஒரு எடியோஸ் கார், மூன்று இரு சக்கர வாகனங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா