பாஜக மாநிலத் தலைவர் நடத்திய வேல் யாத்திரை திருச்செந்தூர் தரிசனத்துடன் நிறைவு


கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்த அரசு அனுமதி மறுத்தது. என்றாலும் எல். முருகன் தலைமையில் வேல் யாத்திரை நடைபெற்றது. தடையை மீறி வேல் யாத்திரை நடத்திய பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.அறுபடை வீடுகளுக்கு செல்ல இருந்த வேல் யாத்திரையை மழை தடை செய்தது. நிவர் புயர், புரேவி புயல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேல் யாத்திரையை சில தினங்களுக்கு மீண்டும் தொடங்கியது.சஷ்டி திதியை மையமாக வைத்து பாஜக வேல் யாத்திரை தொடங்கியது. நவம்பர் 6ஆம் தேதி தேய்பிறை சஷ்டி திதி. டிசம்பர் 6ஆம் தேதி தேய்பிறை சஷ்டி திதியாகும். நேற்று முருகன் ஆலயங்களில் பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. திருத்தணியில் தொடங்கி திருச்செந்தூர் வரை முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்குக்கும் வேல் யாத்திரையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் எல். முருகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா