திறந்து வைத்த போயஸ் தொட்ட விட்டுச் சாவி உடனே பூட்டி நீதிமன்றப் பதிவாளரிடம் கொடுக்கவேண்டிய நிலை

 தமிழக முதல்வராக இருந்த ஜெ. ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லத்தை நினைவில்லமாக்க  2017ஆம் ஆண்டு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அறிவித்ததைத் தொடர்ந்து, போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக அறிவித்து, நிலம் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்ததனிடையே, வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, போயஸ் கார்டன் மற்றும் கஸ்தூரி எஸ்டேட் பகுதி வீட்டு உரிமையாளர்கள் சங்கம் சார்பில்  சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணையில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், போயஸ் கார்டன் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தது. முன்னதாக, ஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்கு, ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளாக தொடர்பான வழக்கு விசாரணையில் தீர்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜெயலலிதா போயஸ் தோட்டம் இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்றும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்ததுடன், முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமாக ஏன் மாற்ற கூடாது எனவும் கேள்வி எழுப்பியது.

மேலும், மேலும், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டம் இல்லத்தின் ஒரு பகுதியை மட்டும் நினைவு இல்லமாக மாற்றலாம் எனவும் நீதிமன்றம் அப்போது கருத்து தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இச் சூழ்நிலையில் தற்போது திறந்து வைத்து விட்டு உடனே வீட்டைப்  பூட்டி  நீதிமன்றப் பதிவாளரிடம்   சாவியை கொடுக்கவேண்டிய
நிலை 

போயஸ்  கார்டன் வேதா நிலையம் என்பது தான் எதார்த்தமான உண்மை நிலை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்