என்ஐசிஎஸ்ஐ வெள்ளி விழா

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

வெள்ளி விழாவை கொண்டாடியது தேசிய தகவல் சேவை மையம்(என்ஐசிஎஸ்ஐ): தேஜஸ் நுண்ணறிவு கருவி, இ-ஏலம், என்ஐசி தயாரிப்புகளை தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் மத்திய மின்னனுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய தகவல் மையத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான என்ஐசிஎஸ்ஐ தனது வெள்ளி விழா
வை  இன்று கொண்டாடியது. இதற்கு மத்திய மின்னனுவியல் மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத், தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

தொழில்நுட்பம் என்பது  செயல்படுத்தக்கூடியது, எளிதாக்கக்கூடியது மற்றும் சக்தி வாய்ந்தது.  சாதாரண இந்தியர்களை  தொழில்நுட்ப சக்தியுடன் மேம்படுத்தும் இயக்கம்தான் டிஜிட்டல் இந்தியா. இதை உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் சாதிக்க வேண்டும். தரவு பொருளாதாரத்தில், இந்தியாவை உலகின் முன்னணி நாடாக நான் பார்க்கிறேன். இதில் என்ஐசிஎஸ்ஐ முக்கிய பங்காற்றும்.  நாம் உருவாக்க போகும் தரவு, எளிதாக்கக் கூடியதாகவும், தரவு பொருளாதாரத்தை முடுக்கிவிடுவதாகவும்  இருக்கும். டிஜிட்டல் இந்தியா பற்றியும், மலிவு விலை தொழில்நுட்ப தீர்வுகளை அறியவும் பல ஆப்பிரிக்க நாடுகள் விரும்புகின்றன. இதில் என்ஐசிஎஸ்ஐ  முக்கிய பங்காற்ற முடியும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தேஜஸ் என்ற காட்சி நுண்ணறிவு கருவி, இ-ஏலம் இந்தியா, எங்கிருந்தும் பணியாற்றும் இணையதளம், என்ஐசி தயாரிப்புகள் ஆகியவற்றை மத்திய அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார்.  என்ஐசிஎஸ்ஐ-யின் வெள்ளி விழா மலரையும் அவர் வெளியிட்டார். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்