அரசு பள்ளிகளோடு இணைந்து 100 புதிய சைனிக் பள்ளிகள் தொடங்குவதற்கான அறிவிப்பு

பாதுகாப்பு அமைச்சகம்

அரசு சாரா தொண்டு நிறுவனங்கள்/தனியார் பள்ளிகள்/ அரசு பள்ளிகளோடு இணைந்து 100 புதிய சைனிக் பள்ளிகள் தொடங்குவதற்கான அறிவிப்பு
மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ளது

அரசு சாரா தொண்டு நிறுவனங்கள்/தனியார் பள்ளிகள்/ அரசு பள்ளிகள் உள்ளிட்டவற்றோடு இணைந்து 100 புதிய சைனிக் பள்ளிகளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடங்குவதற்கான அறிவிப்பு 2020-21 மத்திய பட்ஜெட்டில் செய்யப்பட்டுள்ளது

2021 பிப்ரவரி 1 அன்று நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். விருப்பம் உள்ள அரசு / தனியார் பள்ளிகள் / அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றோடு இணைந்து சைனிக் பள்ளிகளின்

 கோட்பாடுகள், மதிப்பு முறைகள் மற்றும் தேசிய பெருமையோடு இணைந்த சிபிஎஸ்சி பிளஸ் வகையை சேர்ந்த பள்ளிக் கல்வி வாய்ப்புகளை வழங்குவதே இதன் நோக்கமாகும்.

சைனிக் பள்ளிகளின் பாடத்திட்டத்தை சார்ந்து இயங்க உள்ள ஏற்கனவே இருக்கும் அல்லது புதிதாக தொடங்கப்படும் பள்ளிகளை இணைத்துக் கொள்ள இந்த திட்டம் வழிவகுக்கிறது.

தற்போது நாடு முழுவதும் 33 சைனிக் பள்ளிகள் இயங்குகின்றன. 2021-22 கல்வியாண்டில் இருந்து, அனைத்து சைனிக் பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பில் மாணவிகளும் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்