மிகப்பெரிய உணவுப் பூங்காக்களை அமைப்பதற்கான விண்ணப்பிக்க அழைப்புஉணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம் மிகப்பெரிய உணவுப் பூங்காக்களை அமைப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மிகப்பெரிய உணவுப் பூங்கா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மிகப்பெரிய உணவு பூங்காக்களை நிறுவுவதற்கான விண்ணப்பங்களை 2021 பிப்ரவரி 3 அன்று மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகம் வரவேற்றது.

உணவுப் பதப்படுத்தல் துறைக்கு நவீன உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காக மிகப்பெரிய உணவு பூங்காக்கள் திட்டத்தை மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. பிரதமரின் விவசாயிகள் வளத் திட்டத்தின் புதிய பகுதியாக இந்தத் திட்டம் உள்ளது.

பிரதமரின் விவசாயிகள் வளத் திட்டத்தின் கீழ் வரும் திட்டங்களுக்காக மொத்தம் 3323 விண்ணப்பங்கள் இது வரை வரப்பெற்றுள்ளன. மிகப்பெரிய உணவு பூங்காக்கள், ஒருங்கிணைந்த குளிர்பதன மற்றும் மதிப்பு கூட்டல் உள்கட்டமைப்பு, வேளாண் பதப்படுத்துதல் தொகுப்புகளுக்கான உள்கட்டமைப்பு, பின்னணி மற்றும் முன்னணி இணைப்புகளை உருவாக்குதல், உணவு பதப்படுத்துதல் மற்றும் சேமிப்பு திறன்களை உருவாக்குதல்/விரிவுப்படுத்தல், உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய உள்கட்டமைப்பு, மனிதவளங்கள் மற்றும் நிறுவனங்கள், பசுமை செயல்பாடு ஆகியவை இத்திட்டத்தின் கீழ் வரும் திட்டங்களாகும்.

2021 பிப்ரவரி 5ஆம் தேதி நிலவரப்படி, தமிழ்நாட்டில் மட்டும் 25 விண்ணப்பங்கள் பிரதமரின் விவசாயிகள் வளத் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ளன.

மேற்கண்ட தகவல்களை, நாடாளுமன்றத்தின் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய உணவு மற்றும் பதப்படுத்துதல் தொழில்கள் இணை அமைச்சர் திரு ராமேஸ்வர் தேலி தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்