தீர்த்தங்களில் பக்தர்கள் புனித நீராட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவில் வளாகத்திலுள்ள, 22 தீர்த்தங்களில் பக்தர்கள் புனித நீராட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரானா பரவுதல்  ஊரடங்கால், 2020 மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல், அனைத்துக் கோவில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி நிறுத்தி செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தளர்வுகள் அறிவித்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தீர்த்த தலங்களில் குறிப்பாக அழகர் கோவில் நூபுரகங்கை  ராமேஸ்வரம்  கோவிலில் கோடித்தீர்தம்  உள்ளிட்ட, 22 தீர்த்தங்களில் புனித நீராட பக்தர்களை இந்து அறநிலையத்துறை அனுமதிக்கவில்லை.2021  பிப்ரவரி.1 ஆம் தேதி முதல் தளர்வில், இராமேஸ்வரம் கோவில் தீர்த்தங்களை திறக்க, அரசு உத்தரவிட்டதையடுத்து, நேற்று  முதல், 22 தீர்த்தங்களில் புனித நீராட பக்தர்கள் அனுமதிக்கப்படனர்.'தினமும் காலை, 5:30 முதல் மாலை, 6:00 மணி வரை புனித நீராடலாம். கட்டணம், 25 ரூபாய்' என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்