மனிதர்களின் பெருவாழ்வு என்பது "மனிதம்" என்ற ஒன்றால் கட்டமைக்கப்பட்டது.
 மனிதர்களின் பெருவாழ்வு என்பது "மனிதம்" என்ற ஒன்றால் கட்டமைக்கப்பட்டது. மனிதம் என்பது சக மனிதன் வீழும் சமயத்தில் அவனுக்கு உறுதுணையாகவோ, ஆறுதலாகவோ இருக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு ஆகும். எளிமையாகச் சொன்னால், எவ்வித எதிர்பார்ப்புமில்லாமல் மனிதனை மனிதனே காப்பாற்ற வேண்டும் என்பதுதே. இதை நாம் ஜனநாயகக் கோட்பாடாக கொண்டிருக்கிறோம்  உலகத்தின் அனைத்து மதங்களும் இதைத்தான் சொல்கின்றன அது மிகையுமல்ல.

இதே பண்பைத்தான் இயற்கையும் கொண்டிருக்க. தற்போது இணையத்தில் வைரலாகும் ஒரு புகைப்படம் மனிதத்தினை மனிதனுக்கு நினைவூட்டும் வகையில் உள்ளது இப் புகைப்படத்திலுள்ள பெரிய மரம்  வேர்களோடு வெட்டப்பட்ட ஒரு மரத்தினை தாங்கிப்பிடித்துக்கொண்டிருக்கிறது. ஆம் கைகொடுத்து உதவுது போலிருக்கிறது. இது போன்ற மரங்களுக்கு "ஜெம்ஸ்" (அற்புத மரங்கள்) என்றுதான் அழைக்கப்படுகிறது.

 ஒன்றோடு ஒன்று இணைத்துக்கொண்ட மரங்கள் பல இருந்தாலும் வேறோடு வெட்டப்பட்ட ஒரு மரத்தினை தாங்கிப்பிடித்திருப்பது போன்ற மரங்களாக அவை இருப்பதில்லை. மரங்கள் வெவ்வேறு மூலக்கூறுகளோடு இருந்தாலும் அதன் திசுக்கள் ஒன்றோடு இணைத்துக்கொள்ளும் வகையில்தான் இருக்கும். இதனை அடிப்படையாகக் கொண்டு தான் கலப்பின மரங்கள், கலப்பினப் பழங்கள் , கலப்பினப் பூக்கள் ஆய்வில் உருவாக்கப்படுகின்றது.

டிவிட்டரில் வைரலாகும் இப் புகைப்படமெங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரங்களில்லை என்றாலும், "இது மனிதத்தினை எடுத்துரைப்பதாக உள்ளது" என இணையதளவாசிகளால் பகிரப்படுகிறது. இந்த கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கத்தில் ஒற்றுமை, நல்லெண்ணம் என்பது அவசியாமான ஒன்றாக இருக்கிறது. பெருந்தொற்று காலத்தில் ஒருவருக்கொருவர் நல்லெண்ணத்துடன் இருங்கள்,மனிதம் கொன்று பணம் ஈட்டி என்ன பயன் என்பதே பலரின் கருத்தாக உள்ளது நாம் தமிழகத்தின் இயற்கை காட்சிகளையும் அற்புதங்கள் அனுபவித்த கடைசி தலைமுறை தற்போது இயற்கை அனுபவிக்கும் நிலையில் நாம் யாவரும் இல்லை காரணம் இந்த கொரானா எனும் வேதியியல் யுத்தம் இதில் அணைவரும் தப்பி அடுத்து வரும் சூழலில் இயற்கை நமக்கு எவ்வளவு காலம் துணை வரும் என்பது கேள்வி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா