நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் எனக்கும் எந்தவித விரோதமுமில்லை அவர் தந்தை பற்றி பேசியது மட்டும் தவறு ஹெச்.ராஜா விளக்கம் .நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை பற்றி பேசியது மட்டும் தவறானது!’ - ஹெச்.ராஜா விளக்கம்

"நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் எனக்கும் எந்தவித விரோதமுமில்லை. அவர் தந்தையும் சிறைத்துறையில் இருந்தவர் என்பதால் தவறுதலாக அவர் பெயரைக் கூறிவிட்டேன். சிவகார்த்திகேயனை தர்மசங்கடத்தில் ஆழ்த்த வேண்டுமென்று பேசவில்லை" என்று, பாஜகவின் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ஹெச்.ராஜா விளக்கமளித்துள்ளார். அதேநேரம் மமக  தலைவரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரான ஜவாஹிருல்லாவை பேசியுள்ளது மீண்டும் சர்ச்சையானது.

ஹெச்.ராஜா சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் தமிழகத்தின் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மற்றும் மமக தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா உள்ளிட்டவர்களை  விமர்சித்துப் பேசியவர், சிறை அதிகாரியாக இருந்த நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை கொலை செய்யப்பட்டதற்கு ஜவாஹிருல்லா காரணம் என்று கூறினார்.

ஹெச்.ராஜா. ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மமக சார்பில் டி.ஜி.பி-யிடம் புகார் மனு  அளிக்கப்பட்டது. மாவட்ட அளவிலும் மமகவினர் காவல்துறையில் புகாரளித்த நிலையில் நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, "சிவகார்திகேயனுக்கும் எனக்கும் எந்தவித விரோதமும் இல்லை. அவர் தந்தையும் காவல்துறையில் இருந்தவர் என்பதால் தவறுதலாக அவர் பெயரைக் கூறிவிட்டேன். அவரை தர்மசங்கடத்தில் ஆழ்த்த வேண்டுமென்று பேசவில்லை" என்றவர், தொடர்ந்து பேசும்போது,

"மதுரையில் ஜெயிலர் ஜெயப்பிரகாஷைங் கொன்ற அல் உம்மா இயக்கத்தில் ஜவாஹிருல்லா உறுப்பினராக இருந்தவர் தான். அவர் குற்றம் செய்ததாகக் கூறவில்லை. அதேநேரம் கோவை கலவரத்தைத் தொடர்ந்து அரசு அனுமதி இல்லாமல் வெளிநாட்டிலிருந்து நிதியை பெற்ற வழக்கில் ஒருவருடம் தண்டனை பெற்றவர் ஜவாஹிருல்லா. அந்த வழக்கு மேல் முறையீடு செய்யபட்டுள்ளது. இவர் ஜாமீனில் உள்ளார். இவர்தான் பாபநாசம் எம்.எல்.ஏ என்று கூறினேன். இதிலொன்றும் தவறில்லை. இதற்காக என்னைப் பலரும் விமர்சிக்கிறார்கள். நான் இதை சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்" என்றார்.

தொடர்ந்து பேசியபோது "பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியரை அதிகபட்ச தண்டனையாக தூக்கிலேயே போடலாம். ஆனால் பள்ளி நிர்வாகத்தை குறை கூறுவது உள்நோக்கம் கொண்டது. எத்தனையோ கிறிஸ்தவப் பள்ளிகளில் இதுபோன்ற குற்றச்சாட்டு எழுந்தபோது யாரும் நிர்வாகத்தைக் குறை கூறவில்லை என்றார்.

தமிழகத்தில் தடுப்பூசி போட மக்களை தயக்கப்பட வைத்தது தற்போதுள்ள ஆளும் கட்சியும், அதனுடைய கூட்டணிக் கட்சியும் தான். கொரோனா தொற்று ஒழிப்பில் தமிழக அரசு இன்னும் எச்சரிக்கையோடு கவனம் செலுத்த வேண்டும். மெத்தனப்போக்கு கூடாது. தமிழ்நாட்டில் 12 லட்சத்திற்கு மேல் தடுப்பூசிகள் வீணாக போயுள்ளன.

சிவகார்த்திகேயன்

நான் செய்தியாளர்களிடம் பேசும்போது யாரைப் பற்றியும் அவதூறாகவோ, தவறுதலாக பேசியதே கிடையாது. எந்த சமுதாயத்தை பற்றியும் இழிவாக பேசியது கிடையாது. நான் சமுதாய ரீதியாக பேசியதாக விமர்சிக்கும் விடுதலை சிறுத்தைகள் தான் ஜாதி கட்சி. ஜவாஹிருல்லாதான் மதவாத கட்சி.

நான் அன்று சிவகார்த்திகேயன் தந்தையை பற்றி பேசியது மட்டும்தான் தவறானது. மற்றபடி நான் கூறியது அனைத்தும் உண்மை" என்றார்.

 நமக்குத் தெரிந்நவரை நடிகர் சிவகார்த்திகேயன் அவர் தந்தை தாஸ் பரிவள்ளல் ஆண்ட பரம்புமலையான பிரான்மலையைச் சேர்ந்த தமிழகத்தின் முதலமைச்சர்       சமூகத்தைச் சேர்ந்த திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் பணியிலும் பின்னர் கோயமுத்தூர் மத்திய சிறையில் பணியிலிருந்த காலத்தில் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்திய சந்தனக்கடத்தல் வீரப்பன் தனது கூட்டாளிகள் சிலரை சிறையில் விடுவிக்கச் சொன்ன கைதிகளை தமிழக அரசு அனுமதியுடன் விடுதலை செய்த பிரச்சினை காரணமாக ஆட்சி மாற்றம் காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளாகி திடிரென மாரடைப்பு ஏற்பட்டு 2003 ல் காலமானார் என்பதும் அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு தான் சிவகார்த்திகேயன் நடிகராக ஆனதும் நிஜம். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா