போலி ஜாதிச் சான்றிதழில் அமராவதி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான தெலுங்கு நடிகை நவ்னீத் கவுருக்கு 2 லட்சம் அபராதம்.
பிரபலமான தெலுங்கு நடிகை நவ்னீத் கவுர், வயது 35, தமிழில் அரசாங்கம், அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். போலி சாதிச் சான்றிதழ் விவகாரத் தில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் எம்.பி.யும் நடிகையுமான நவ்னித் கவுருக்கு மும்பை உயர் நீதிமன்றகா கிளை ரூபாய்.  2 லட்சம் அபராதம்

மகாராஷ்டிராவின் விதர்பா மண்டலத்திலுள்ள அமராவதி தொகுதி எஸ்சி-எஸ்டி பிரிவினருக்கான தனித் தொகுதியில் 2014 ஆம் ஆண்டு சிவசேனா வேட்பாளர் ஆனந்த்ராவ் அதுசுல்லை எதிர்த்து நடிகை நவ்னீத் கவுர் சுயேச்சையாகப்

போட்டியிட்டு தோல்வி கண்டார். இதைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதே ஆனந்த்ராவை எதிர்த்து நடிகை நவ்னித் கவுர் போட்டியிட்டு. இம்முறை தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் ஆனந்த்ராவை தோற்கடித்து நவ்னீத் கவுர் எம்பியானார். மகாராஷ்டிராவில் தேர்ந்தெடுக் கப்பட்ட 8 பெண் உறுப்பினர்களில் ஒருவரான

நவ்னீத் போலி சாதி சான்றிதழைச் சமர்ப்பித்தார் என தோல்வியடைந்த ஆனந்த ராவ் மும்பை உயர் நீதிமன்றம் நாக்பூர் கிளையில் கிளையில் வழக்கு

தொடர்ந்தார்.

 மனுவில்  நடிகை நவ்னீத் கவுர், பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர்.

அவர் லபானா சாதியைச் சேர்ந்த வர். இந்தச் சாதியானது மகாராஷ்டிராவின் பட்டியலினத்தில் வராது ஆனால், அவர் பட்டியலினத்துக்குள் வரும் மோச்சி என்ற சாதியின் பெயரில் சாதிச் சான்றிதழை சட்டவிரோதமாக போலி ஆவணங்களைச் சமர்ப்பித்துப் பெற்றிருக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த

 வழக்கில் நேற்று நாக்பூர் உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பு வழங்கியது. போலியான சாதிச் சான்றிதழை சமர்ப்பித்துள்ள குற் றத்துக்காக ரூபாய் .2 லட்சம் அபராதத்தை நவ்னீத் கவுர் செலுத்த வேண்டுமென்றும், மேலும் சான்றிதழை நீதிமன்றத்தில் 6 மாத காலத்திற்க்குள் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்