உலக கோப்பை 3வது நிலை போட்டியில் பங்கேற்க இந்திய வில்வித்தை வீரர்கள் பாரீஸ் புறப்பட்டனர்

எரிசக்தி அமைச்சகம்    உலக கோப்பை 3வது நிலை போட்டியில் பங்கேற்க இந்திய வில்வித்தை வீரர்கள் பாரீஸ் புறப்பட்டனர்


டோக்கியோ ஒலிம்பிக் இறுதி தகுதிப்போட்டி, உலக கோப்பை 3 ஆம் நிலை போட்டி ஆகியவற்றில் பங்கேற்க, இந்திய வில்வித்தை வீரர்கள் பாரீஸ் புறப்பட்டனர்.

டோக்கியோ ஒலிம்பிக் இறுதி தகுதிப் போட்டி, பாரீஸில் ஜூன் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடக்கிறது. உலகக்கோப்பை 3ம் நிலை போட்டி ஜூன் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கிறது.

இவற்றில் பங்கேற்க இந்திய வில்வித்தை வீராங்கனைகள் குழுவில் உள்ள தீபிகா குமாரி, கோமலிகா பாரி, அங்கிதாபகத்,  மதுவேத்வான், துரோனோச்சார்யா விருது பெற்ற பூர்ணிமா மகோதா  உட்பட 9 பேர் கொண்ட குழுவினர் பாரீஸ் புறப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் வில்வித்தை போட்டியின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்காகவும், இதை உலக அரங்குக்கு கொண்டு செல்வதற்காகவும், இந்திய வில்வித்தை சங்கத்துடன் இந்தியாவின் மிகப் பெரிய மின் நிறுவனமான என்டிபிசி நிறுவனம் இணைந்துள்ளது.

இந்திய வில்வித்தை குழுவில், ஆண்கள் பிரிவில் இடம் பெற்றுள்ள அதானு தாஸ், தரூண்தீப் ராய் மற்றும் பிரவின் ரமேஷ் ஜாதவ் ஆகியோரும் உலக கோப்பை 3ம் நிலை போட்டியில் பங்கேற்பதற்காக பாரீஸ் புறப்படவுள்ளனர்.

சமீபத்தில் கவுதமாலாவில் நடந்த வில்வித்தை உலக கோப்பை முதல்நிலை போட்டியில் இந்திய வில்வித்தை வீராங்கனைகள் தீபிகா குமாரி, அதானு தாஸ், அங்கிதா பகத் மற்றும் கோமலிகா பாரி ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடினர். பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தனிநபர் போட்டியில், தீபிகா குமாரி மற்றும் அதானு தாஸ் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்