தகவல் தராத கீழக்கரை நகராட்சிக்கு ரூபாய் .5 ஆயிரம் இழப்பீடு வழங்க மாநிலத் தகவல் ஆணையம் உத்தரவு

தகவல் தராத கீழக்கரை நகராட்சிக்கு ரூபாய் .5 ஆயிரம் இழப்பீடு வழங்க மாநிலத் தகவல் ஆணையம் உத்தரவுஇராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகமது சாலிஹுசைன் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் படி 2011 ஆம் ஆண்டில் கீழக்கரை நகராட்சி அலுவலகப் பொதுத் தகவல் அலுவலருக்கு மனு அனுப்பியதில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையுள்ள காலத்தில் நகராட்சி  குடிநீர் இணைப்புகள் தெருவிளக்குகள், சாலை கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு, அலுவலர்களின் சம்பளம், படிகள், பொறுப்புகள், பொதுக் கழிவறைகள், ஒப்பந்தப் பணிகள், மத்திய, மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்ட நிதி. வரி வருமானங்கள், பிறப்பு, இறப்புப் பதிவுகள்  உரக்கிடங்கு, வாறுகால்வாய், குடிநீர்த்தேக்க தொட்டி, குப்பைத் தொட்டி, நகராட்சி வாகனங்கள் நசுராட்சி சொத்துகள், ஒப்பந்தப் பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், பணிநேர வருகைப் பதிவேடு உள்ளிட்ட அனைத்துத்  தகவல்கள் மற்றும் அனைத்துப் பதிவேடுகளையும்,.    பதிவேற்றப்பட்ட ஆவண விபரங்களை நேரடியாக பார்வையிட்டு, குறிப்பெடுத்து, ஆய்வு செய்து நகல் எடுக்க அனுமதி கோரியுள்ளார். ஆனால்

கேட்கபட்ட கேள்வி களில் பொதுத் தகவல் அலுவலரான நகராட்சி ஆணையாளர் சார்பில் சில கேள்விகளுக்கு மட்டும் பதில் வழங்கப்பட்டுள்ளது அனைத்து கேள்விகளுக்கும் முழுமையாகப் பதில் தரவில்லை, ஆவணங்களை நேரடியாகச் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து குறிப்பிடுக்க அனுமதி வழங்கவில்லை எனக் கூறி முகமது சாலிஹூசைன், மாநிலத் தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக முகாமில் நடந்த விசாரணையில் அவரின் மேற்முறையீட்டு மனு ஏற்கொள்ளப்பட்டது. அப்போது ஆஜரான மனுதாரர் மற்றும் நகராட்சி அலுவலர்களிடம் விசாரணை நடந்ததில் கடந்த 2013 ஆம் ஆண்டில் கீழக்கரை நகராட்சிப் பகுதியில் குடிநீர் இணைப்பிற்காக 

ரூபாய்.6.50 கோடி மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டுள்ளது - ஆனால் இன்று வரை பனிகள் முழுமையாகவில்லை. எனவே அந்த பணி குறித்த தகவலைப் பெற எம் புக் எனப்படும், பணி அளவீடு புத்தகத்தை பார்வையிட அனுமதி வழங்கவில்லை எனவே பார்வையிட ஆணையம் உத்தரவிட வேண்டும் என முகம்மது சாலி ஹூசைன் கோரி தகவல் ஆணையத்தில் முறையிட்டார்.

விசாரணை நடத்திய மாநிலத்  தகவல் ஆணையம், தற்போது ஆணை பிறப்பித்துள்ளதில் மனுதாரர் முழு தகவல்களையும் பெறவும், பார்வையிடவும் அனுமதி வழங்க வேண்டும். முழுமையான தகவல்களை வழங்காமல் அலைக்கழித்ததால், நகராட்சி பொது நிதியிலிருந்து மனு தாரருக்கு ரூபாய் ஐந்தாயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு மாநிலத் தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்