பெட்ரோல்- டீசல் விலையை நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வரும் நிலையில் காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்

பெட்ரோல்- டீசல் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வரும் நிலையில்


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் உயரவில்லை. ஆனாலும், இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 82 ரூபாயையும், ஒரு லிட்டர் டீசல் 75 ரூபாயையும் தாண்டி இருக்கும் இவற்றின் விலை 100 ரூபாயைத் தாண்டி விடுமென்று எதிர் பார்க்கப்படுகிறது.

கச்சா எண்ணை விலையில் பெரிய மாற்றம் இல்லாத போதும் பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு இந்திய பண மதிப்பு வீழ்ச்சிதான் காரணம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 65 ரூபாய்யாக இருந்த நிலையில் இப்போது 71 ரூபாயைத் தாண்டி இருக்கிறது. இதுவும் பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.

தொடர்ந்து பெட்ரோல்- டீசல் விலை உயர்த்தப்பட்டு வருவதாலும், இந்திய பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைவதாலும், அதை எதிர்க்கும் வகையில் பெரிய அளவில் நாடு தழுவிய போராட்டம் நடத்துவதற்கு காங்கிரஸ் திட்டமிட்டு இன்று நடத்தியது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கரோனா ஊரடங்கால் பெட்ரோலியப் பொருட்களின் தேவை குறைந்துள்ளதால் அவற்றின் விலையை, உற்பத்தி செய்யும் நாடுகள் உயர்த்தி வருகின்றன.

இந்தியாவில் இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், அரசின் முடிவின் படி பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள்  பெட்ரோல், டீசல் விலையை  உயர்த்துகின்றன.

மே மாதம் மந்தியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உச்சம் தொட்டு. பின் குறைந்த நிலையில் மீண்டும்  உச்சம் தொட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

 நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். குஜராத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள், பணியாளர்கள், எம்எல்ஏக்கள் 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். காவல்துறையின் அனுமதி பெறாமல் அவர்கள் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த கைது நடவடிக்கை எனத் தெரிவிக்கப்பட்டுளது.

குஜராத் காங்கிரஸ் சார்பில் அகமதாபாத், காந்திநகர், ராஜ்கோட், பரூச், பலன்பூர் மற்றும் வதோதரா ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன

டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் கே.சி.வேணுகோபால் மற்றும் சக்தி சிங் ஆகியோர் குதிரை வண்டிகளில் ஏறி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்துக்குச் சென்றனர்.

விலை உயர்வு குறித்து வேணுகோபால் கூறிய கருத்து, ''காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் பெட்ரால்- டீசல் மீதான வரி ரூ.9.20 ஆக இருந்தது. ஆனால் இப்போது 32 ரூபாய் வரி விதிக்கப்பட்டுள்ளது. கலால் வரி விதிப்பதை அரசு நிறுத்த வேண்டும். பெட்ரால்- டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்'' என தெரிவித்தார்.                     பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து, இன்று தமிழகத்தின் பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் கரூர் உள்ளிட்ட இடங்களில்  ஈடுபட்டுள்ளனர். நாடு தழுவிய அளவில் இந்த போராட்டம் நடைபெற்றது உள்ளதாக காங்கிரஸ் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் ஒருசில இடங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது.

இந்நிலையில் 11 ஆம் தேதி (இன்று) பெட்ரோல் பங்க்குகள் முன் திரண்டு அடையாளப் போராட்டத்தில் ஈடுபடுமாறு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்ததன் படி தமிழகத்தின் பல பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்