பிரதமர் இல்லத்தில் சந்தித்துப் பேசினார் தமிழகத்தின் முதல்வர்

பிரதமர் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து தமிழ்நாட்டிற்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை அளித்த தமிழகத்தின் முதல்வர்


"உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்!" என்ற முத்தமிழறிஞர் கலைஞரின் நிலைப்பாடே திமுக அரசின் நிலைப்பாடு என்ற தகவலுடன். தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டில்லியில் செய்தியாளர் சந்திப்பு பிரதமர் மோடியுடனான சந்திப்பு மன நிறைவுடன் இருந்ததெனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல். தமிழகத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசிகள் வழங்க பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன் மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்

புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியதுடன்  தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.                                  பிரதமரிடம் தமிழகத்தின் முதல்வர் கோரிக்கைகள்.

ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கவும்

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவும்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக அதிகரிக்கவும்

தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்கவும்

செங்கல்பட்டு & குன்னூர் தடுப்பூசி மையங்களில் உற்பத்தியை தொடங்கவும்

நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் எனவும்

மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யவும்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைக்கவும் பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது            டில்லியில் தமிழ் நாடு இல்லத்தில் தமிழகத்தின் முதலமைச்சர்  முக.ஸ்டாலின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, டில்லி சென்றபோது கடைசியாக தங்கிய அறையில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழகத்தில் உள்ள மக்கள்

பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர், அலுவல் காரணமாக டில்லி செல்லும்போது தங்க வசதியாக, 'தமிழ்நாடு இல்லம்' என்ற பெயரில் அரசு விடுதி கட்டப்பட்டு உள்ளது.காமராஜர் ஆட்சியில் முதன்முதலில் கட்டப்பட்ட கட்டடங்கள், அதன்பின் எம்.ஜி.ஆர்., - கருணாநிதி - ஜெ., ஆட்சிகளில் மேம்படுத்தப்பட்டன. இந்த கட்டடங்களை தமிழக பொதுப்பணி துறையினர் பராமரித்து வருகின்றனர்.இந்த கட்டடத்தில், தமிழக கவர்னர் மற்றும் முதல்வர் டில்லி செல்லும்போது தங்க வசதியாக, 'சூட் ரூம்' உள்ளது.

இதில் படுக்கை அறை, கழிப்பறை, உணவருந்தும் அறை, வரவேற்பு அறை, ஒப்பனை அறை, சிறிய சமையலறை உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.இரண்டாவது முறையாக, தொடர்ந்து ஆட்சி அமைத்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா, 2016 ஜூன் மாதம் பிரதமர் மோடியை சந்திக்க டில்லி சென்றார். தமிழ்நாடு இல்லத்தில் முதல்வருக்கான அறையில் தங்கினார். அவர் மறைவுக்கு பின், முதல்வராக இருந்தவர்கள், டிசம்பரில் டில்லி சென்றபோது, அந்த அறையைப் பயன்படுத்தவில்லை.பலமுறை டில்லி சென்றாலும், அந்த அறையை பயன்படுத்தவில்லை. ஜனவரியில்,, டில்லி சென்றபோது, முன்னால் முதல்வர் தங்கும் அறையை பார்வையிட்டு, அடுத்த முறை அங்கு தங்கத் திட்டமிட்டு, சில மாற்றங்களைச் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். பிரதமர் மோடியை சந்திப்பதற்காக இன்று காலை டில்லி சென்றவர். டில்லி விமான நிலையத்திலிருந்து, நேராக தமிழ்நாடு இல்லத்திற்கு செல்லும் அவர், ஜெ., கடைசியாக தங்கிய முதல்வருக்கான, 'சூட்' அறையில் தங்கினார். இதற்காக அந்த அறையில் பல்வேறு பராமரிப்பு பணிகளை பொதுப்பணி துறையினர் மேற்கொண்டு, முதல்வரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் கட்டுப்பாட்டில் ஒப்படைத்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்