முடங்கிய இ பாஸ் அனுமதி இணைப்பு மீண்டும் செயல்படத் தொடங்கியதுதமிழகத்தில் இன்று மாலை வரை தொழில்நுட்ப காரணங்களால் இ- பதிவு தளம் செயல்படாதென தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்த நிலையில் இ-பதிவு தளம்:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மே 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ள காலத்தில் பொதுமக்கள் வெளியில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டு பொதுப்போக்குவரத்து இயங்குவதற்கும் அரசு தடை விதித்தது ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தங்கள் அவசர பயணத்திற்காக இ- பதிவு செய்து பயணிக்கும் படியும்


அத்தியாவசிய கடைகள் காலை 10 மணி வரை இயங்குவதற்கும் அனுமதி அளிக்கப்பட்ட வாய்ப்பை பொதுமக்கள் முறையாகப் பயன்படுத்தாமல் அதிக அளவில் வெளியில் சுற்றி வந்ததனால் நோய் அதிக அளவில் பரவி ஆபத்தானதனால் கடந்த மே மாதம் 24 ஆம் தேதி முதல் தளர்வுகளற்ற ஊரடங்கை அரசு அறிவித்தது. தற்போது மாநிலத்தில் நோய் பாதிப்புகள் குறைந்ததால் இன்று முதல் சில தளர்வுகளை அரசு அளித்ததன்படி, காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மளிகை, காய்கறிகள், இறைச்சிக் கடைகள், பழக்கடைகள் போன்றவை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இணையவழி பதிவு செய்து வாடகை கார் மற்றும் ஆட்டோக்கள் பயணிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், எலக்ட்ரீசியன், பிளம்பர்கள், கணினி உள்ளிட்ட பொருட்கள் பழுது பார்க்கும் நபர்கள், தச்சர் உள்ளிட்ட சுயதொழில் செய்வோருக்கு இ-பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜூன் 20 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பால் சுயதொழில் செய்வோர் அதிக அளவில் பதிவு செய்ய இணையதளத்தை அணுகியுள்ளனர். ஒரே நாளில் பல லட்சம் பேர் இணையத்தில் பதிவு செய்ய முயன்றுள்ளதால் இணையதளம் முடங்கியுள்ளது. இதனை சரி செய்து மாலைக்குள் மீண்டும் சேவை தொடங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்தார் தளர்வுகளால் 60 லட்சம் பேர் ஒரே நேரத்தில் பதிவு செய்ய வந்ததால் இன்று காலை இ-பாஸ் இணையாளம் முடங்கியது. இதனை அடுத்து அமைச்சர் மனோதங்கராஜ் அவர்கள் இன்று மாலைக்குள் இ பாஸ் இணையதள சேவை சரி செய்ய படும் என்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார். தற்போது மீண்டும் இணையதளம் அமைச்சர் கூறிய படியே செயல்பட ஆரம்பித்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்