கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ளத் தயாராக வேண்டுமென மருத்துவக் கல்வி இயக்குநரகம் தகவல்

கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ளத் தயாராக வேண்டுமென மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவு.  மருத்துவக் கல்வி இயக்குநரகம் சார்பில்

மருத்துவமனையின் முதல்வர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு தெரிவித்த சுற்றறிக்கையில்: மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளும், ஐசியு படுக்கை வசதிகளும் ஏற்படுத்த வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படவேண்டும். குழந்தைகள் பிரிவில் நான்கில் ஒரு பகுதி செவிலியர்களை அவசரக்கால பணிக்காக தயார்ப்படுத்திடவேண்டும். பொது மருத்துவம் மற்றும் மயக்கவியல் துறை மருத்துவர்களையும் கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ளத் தயார்ப்படுத்த வேண்டும். கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம்  குறைந்து வருகிற நிலையில் மூன்றாவது அலை விரைவில் தாக்கக்கூடுமென மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்ததன் காரணமாக தமிழகத்தில் மூன்றாவது அலையின் தாக்கம் ஏற்படும் சூழல் உள்ளதால் 18-வயதிற்குக் கீழுள்ள குழந்தைகள் பாதிக்கப்படுவார்களென மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ள நிலையில், குழந்தை மருத்துவர்கள் தயாராக இருக்கவேண்டும். குழந்தைகள் மருத்துவமனைகளில் 100 படுக்கைகள் பிரேத்யேகமாக தயார் நிலையில் இருக்கவேண்டும். ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகளும் தீவிர சிகிச்சை பிரிவு வசதியுடன் படுக்கைகளும் எப்போதும் தயாராக இருக்கவேண்டும்.  குழந்தைகள் மருத்துவப் பிரிவில் நான்கில் ஒரு செவிலியர் அவசரக்காலப் பணி செய்யத் தயாராக இருக்கவேண்டும் என மருத்துவ கல்வி இயக்குநரகம் கூறியுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்