ஓய்வூதியர்களுக்கு அகவிலை நிவாரணத்தை உயர்த்தி வழங்குவதற்கான உத்தரவு வெளியீடு

பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்  ஓய்வூதியர்களுக்கு அகவிலை நிவாரணத்தை உயர்த்தி வழங்குவதற்கான உத்தரவுகளை ஓய்வூதியம் & ஓய்வூதியர் நலத்துறை வெளியிட்டுள்ளது

2021 ஜூலை 14 அன்று மத்திய அமைச்சரவை எடுத்த முடிவைத் தொடர்ந்து, ஓய்வூதியர்களுக்கு அகவிலை நிவாரணத்தை உயர்த்தி வழங்குவதற்கான உத்தரவுகளை 2021 ஜூலை 22 அன்று ஓய்வூதியம் & ஓய்வூதியர் நலத்துறை வெளியிட்டது.

இதன் மூலம், மத்திய அரசு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு (பாதுகாப்பு படைகள், அனைத்திந்திய சேவைகள் மற்றும் ரயில்வே ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் உட்பட) 2021 ஜூலை 1-ல் இருந்து அடிப்படை ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியத்தில் அகவிலை நிவாரணம் 28 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். தற்போது இது 11 சதவீதமாக இருக்கும் நிலையில், 17 சதவீதம் உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட வரலாறு காணாத சூழ்நிலையின் காரணமாக, 01.01.2020, 01.07.2020 மற்றும் 01.01.2021 ஆகிய தேதிகளில் இருந்து நிலுவையில் உள்ள ஓய்வூதியர்களுக்கான அகவிலை நிவாரணம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது, 2021 ஜூலை 1 முதல் அடிப்படை ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியத்தில் 17 சதவீதமாக இருக்கும் அகவிலைப்படியை 28 சதவீதமாக, அதாவது 11 சதவீதம், உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. 01.01.2020, 01.07.2020 மற்றும் 01.01.2021 மூலம் உருவாகியுள்ள கூடுதல் தவணைகளை இந்த உயர்வு பிரதிபலிக்கிறது. 2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூன் 30 வரையிலான காலகட்டத்திற்கான அகவிலை நிவாரணம் 17 சதவீதமாக இருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா