மதுரை பணமோசடி ஊழல் செய்த காவல் ஆய்வாளர் வசந்தி பணியிடை நீக்கம்.

மதுரை பணமோசடி ஊழல் செய்த காவல் ஆய்வாளர் வசந்தி பணியிடை நீக்கம்.       


                                              மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் பேக் தைத்து விற்பனை செய்யும் வியாபாரியிடம் ரூபாய் பத்து லட்சம் பணத்தைப் பிடுங்கிய காவல்துறை ஆய்வாளர் வசந்தி.

கஞ்சா கேஸ் போட்டு உள்ள தள்ளிடுவேன் என்று மிரட்டியது மேல் விசாரணையில் உண்மை என்றானது சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அர்ஷத். பேக் தயாரிக்கும் தொழில் செய்கிறார். இவர் மதுரை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்பாஸ்கரனிடம் கொடுத்த புகாரில், "வில்லாபுரத்தில் பேக் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்த நான், தனியாகத் தொழில் செய்ய எனது உறவினர்களிடம் கடன் வாங்கி பத்து லட்ச ரூபாயுடன், பாண்டி என்பவரிடம் மேலும் கடன் பெற ஜூலை மாதம் 5 ஆம் தேதி நாகமலை புதுக்கோட்டைக்குச் சென்றேன். வீட்டில் போய் பணத்தை எடுத்து வருவதாகச் சொன்ன பாண்டி என்னை அங்கே இருக்கச் சொல்லிவிட்டு போனார்.


அந்த நேரம் பார்த்து அங்கு வந்த காவல்துறை ஆய்வாளர் வசந்தி, நான் வைத்திருந்த பத்து லட்சம் பணத்தைப் பறித்துக் கொண்டு, `நாளை காவல்நிலையத்தில் வந்து பணத்தைப் பெற்றுக்கொள்’ என்று கூறிவிட்டு சென்றார். மறுநாள் போய் கேட்டதற்கு, `உன் பையில் எந்தப் பணமும் இல்லை. இனி மேல் இங்கு வராதே, இனி பணத்தை பற்றி பேசினால் உன்மீது கஞ்சா வழக்குப் போட்டுவிடுவேன்’ என்று மிரட்டினார். என் பணத்தை மீட்டு இதன் பின்னணியில் இருப்பவர்களின் மீது நடவடிக்கை எடுங்கள்" என்று மனுவில் கூறியிருந்தார் மதுரை மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர்பாஸ்கரன், இந்தப் புகாரை விசாரிக்க ஏடிஎஸ்பி சந்திரமெளலிக்கு உத்தரவிட்டார். விசாரணையில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக சிலர் கூறியதை நம்பி அர்ஷத் பணத்துடன் நாகமலை புதுக்கோட்டை வந்துள்ளார்.       இதைத் தெரிந்துகொண்ட உக்கிரபாண்டியன், பால்பாண்டி, கார்த்திக், பாண்டியராஜாவுடன் காவல்துறை ஆய்வாளர் வசந்தியும் சேர்ந்து கொண்டு பணத்தைப் பறித்தது தெரிய வந்தது. பணத்தை இழந்த அர்ஷத் இதை யாரிடமும் புகார் செய்ய மாட்டார் என்று அவர்கள் நினைத்த நிலையில் காவல்துறை கண்காணிப்பாளரிடம் அவர்  புகார் செய்ததால் மோசடி காவல்துறை ஆய்வாளர் சிக்கியுள்ளார்.


காவல்துறை ஆய்வாளர் வசந்தி உட்பட ஐந்து நபர்கள் மீது மாவட்டக் குற்றப்பிரிவுக் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மோசடி காவல்துறை ஆய்வாளர் வசந்தி பணியிடை நீக்கம் செய்யப்படுள்ளார்

மோசடி காவல்துறை ஆய்வாளர் வசந்தியின் மீது இந்திய தண்டனை சட்டம் 384, 409,420, 506(1) ஆகிய நான்கு பிரிவுகளில் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் குற்ற எண் 18/ 2021 ன் படி  வழக்குப் பதிவு செய்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா