லடாக் யூனியன் பிரதேசத்துக்கு ஒருங்கிணைந்த பல்-நோக்கு கார்பரேஷன் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அமைச்சரவை லடாக் யூனியன் பிரதேசத்துக்கு ஒருங்கிணைந்த பல்-நோக்கு கார்பரேஷன் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்லடாக் யூனியன் பிரதேசத்துக்கு, ஒருங்கிணைந்த பல்நோக்கு உள்கட்டமைப்பு வளர்ச்சி கார்பரேஷன் அமைக்க, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

இந்த கார்பரேஷனுக்கு நிர்வாக இயக்குனர் பதவியை ரூ.1,44,200 - 2,18,200  என்ற சம்பளத்தில் உருவாக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்த கார்பரேஷனின் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு பங்கு ரூ.25 கோடியாக இருக்கும், இதன் செலவு ஆண்டுக்கு ரூ.2.42 கோடியாக இருக்கும். இது புதிய நிறுவனம். தற்போது, இது போன்ற அமைப்பு, புதிதாக உருவாக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தில் இல்லை.  இந்த ஒப்புதல் மூலம் பலவித வளர்ச்சி பணிகளை கார்பரேஷன் மேற்கொள்ளவுள்ளதால்,  வேலை வாய்ப்புகள் உருவாகும்.  தொழில்துறை, சுற்றுலா, போக்குவரத்து மற்றும் உள்ளூர் பொருட்கள் மற்றும் கைவினை பொருட்களின் விற்பனைக்காக இந்த கார்பரேஷன் பணியாற்றும்.  

லடாக்கில் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கிய கட்டுமான முகமையாக இந்த கார்பரேஷன் பணியாற்றும்.

இந்த கார்பரேஷன் அமைப்பதன் மூலம், லடாக் யூனியன் பிரதேசத்தில் ஒருங்கிணைந்த வளர்ச்சி ஏற்படும். இப்பகுதி மக்களுக்கு சமூக பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும்.

இந்த வளர்ச்சியின் தாக்கம் பல கோணங்களில் இருக்கும். மனித வளங்களின் மேம்பாட்டுக்கு இது உதவும்.  சரக்குகள் மற்றும் சேவைகளின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் சுமூகமான விநியோகத்தை  அதிகரிக்கும். அந்த வகையில், இந்த ஒப்புதல், தற்சார்பு இந்தியா இலக்கை அடைய உதவும்.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா