ஒலிம்பிக் திரையிடல் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கலந்து கொண்டு இந்திய வீரர்களுக்கு உற்சாகமூட்டின

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்  புதுதில்லியில் நடைபெற்ற ஒலிம்பிக் திரையிடல் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திரு அனுராக் தாகூர், திரு நிசித் பரமாணிக் கலந்து கொண்டு இந்திய வீரர்களுக்கு உற்சாகமூட்டினர்


புதுதில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் இந்திய விளையாட்டு ஆணையம் ஏற்பாடு செய்த ஒலிம்பிக் தொடக்க விழா திரையிடல் நிகழ்ச்சியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு அனுராக் தாகூர் மற்றும் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு இணை அமைச்சர் திரு நிசித் பரமாணிக் கலந்து கொண்டு இந்திய வீரர்களுக்கு உற்சாகமூட்டினர்,

ரயில்வே இணை அமைச்சர்கள் திரு ராவ் சாகேப் பட்டீல் தான்வே மற்றும் திருமதி தர்ஷனா ஜர்தோஷ், நான்கு முறை ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட வீரர் திரு யோகேஷ் தத், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் வீராங்கனை திருமிகு கர்ணம் மல்லேஸ்வரி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய திரு அனுராக் தாகூர், சிறு நகரங்களில் இருந்து வெளிப்படும் திறமைகளும் இன்றைக்கு அடையாளம் காணப்பட்டு, வளர்த்தெடுக்கப்படுகின்றன. உயரிய அளவில் போட்டியிடுவதற்கு தேவையான சிறப்பான வசதிகளும், தொழில்முறை பயிற்சியும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், இந்தியாவை விளையாட்டுகளில் சிறந்து விளங்க செய்வதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கடந்த சில வருடங்களாக களப்பணி நடைபெற்று வருகிறது என்றார்.

130 கோடி இந்தியர்கள் 127 ஒலிம்பிக் வீரர்களுக்கு ஊக்கமளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்திய வீரர்கள் 18 பிரிவுகளில் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். முன்னெப்போதும் இல்லாத அளவில் 56 வீராங்கனைகள் நமது நாட்டில் இருந்து பங்கேற்கின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா