லோகமானிய பால கங்காதர திலகர் மற்றும் சந்திர சேகர் ஆசாத் பிறந்த நாளில் பிரதமர் அவர்களுக்குப் புகழாரம்

பிரதமர் அலுவலகம் லோகமானிய திலகரின் பிறந்த நாளில் பிரதமர் அவருக்கு புகழாரம்


பிரதமர் திரு நரேந்திர மோடி, அரும்பெரும் தலைவரான லோகமானிய திலகரின் பிறந்த நாளில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

பிரதமர் தனது தொடர்ச்சியான சுட்டுரைச் செய்திகளில் கூறியுள்ளதாவது :

"அரும்பெரும் தலைவரான லோகமானிய திலகரின் பிறந்த நாளில் அன்னாரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். 130 கோடி இந்தியர்கள், பொருளாதார ரீதியாக வளமான மற்றும் சமூக ரீதியாக முற்போக்கான தற்சார்பு பாரதத்தை உருவாக்க முடிவு செய்துள்ள தற்போதைய சூழ்நிலைகளில், முன்னெப்போதையும் விட அவரது எண்ணங்களும் கொள்கைகளும் மிகவும் பொருத்தமானவை.

லோகமானிய திலகர், இந்திய விழுமியங்கள் மற்றும் நெறிமுறைகளில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். கல்வி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான அவரது கருத்துக்கள் தொடர்ந்து பலரை ஊக்குவிக்கின்றன. அவர் ஒரு நிறுவன கட்டமைப்பாளராக இருந்தார், பல உயர்தர நிறுவனங்களை வளர்த்து வந்தார், அவை பல ஆண்டுகளாக முன்னோடி வேலைகளைச் செய்தன."  மேலும்

சந்திர சேகர் ஆசாத் பிறந்த நாளில் பிரதமர் அவருக்குப் புகழாரம்


பிரதமர் திரு நரேந்திர மோடி, சந்திர சேகர் ஆசாத் பிறந்த நாளில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

பிரதமர், சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில் "பாரத மாதாவின் வீரமிக்க மகனான சந்திர சேகர் ஆசாத்தை, அவரது பிறந்த நாளில் நினைவுகூர்கிறேன். துடிப்பான அவரது இளமைக்காலத்தில், இந்தியாவை ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து விடுவிப்பதில் அவர் முனைப்புடன் ஈடுபட்டார். அவர் எதிர்காலத்தை குறித்த சிந்தனையாளராக விளங்கினார். வலுவான மற்றும் நியாயமான இந்தியாவைப் பற்றி கனவு கண்டார்" என்று கூறியுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா