தமிழறிஞர் புலவர் ப.இளங்குமரானார் காலமானார்

 புலவர் இரா. இளங்குமரனார் 30 ஜனவரி 1930 முதல் 25 ஜூலை 2021 வரை வாழ்ந்த தமிழ் அறிஞர் மறைந்தார்.         


                                    பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர், பின் நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பல பணியாளார்.  படிக்கராமருக்கும் வாழவந்தம்மையாருக்கும் இளங்குமரானார் திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரம்  சிற்றூரில் பிறந்தார். 1946 ஏப்ரல் 8 ஆம் தேதியில்  ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கி. பின்னர் தனியே தமிழ் கற்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாக 1951 ஆம் ஆண்டில் புலவர் தேர்வில் முதல் வகுப்பில் வெற்றி பெற்று பள்ளிப்பருவத்தில் சொற்பொழிவாற்றும் திறனும் பாடலியற்றும் திறனும் பெற்றிருந்தவர் இயற்றிய குண்டலகேசி என்னும் காவியம் 1958 ஆம் ஆண்டு மதுரை அங்கயற்கண்ணி ஆலயத்தில் அரங்கேற்றப்பட்டது. தமிழ்ப்பணிக்கு

இவர் எழுதிய நூல்கள் பல நூறாக விரியினும் 


திருக்குறள் கட்டுரைத் தொகுப்பு என்னும் நூலை 1963 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு வெளியிட்டார். சங்க இலக்கிய வரிசையில் புறநானூறு என்னும் நூலை 2003 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் வெளியிட்டார்.

பல ஆண்டுகளாகத் தமிழாசிரியர் பணிபுரிந்தாலும் இவர் விரும்பிச் செய்வது நூலாக்கப் பணிகளேயாகும். பல்வேறு அமைப்புகளில் இணைந்தும் பணிபுரிந்துள்ளார். தமிழ்க்காப்புக் கழகச்செயலாளர்,மதுரை மாவட்டத் தமிழாசிரியர் கழகச்செயலாளர், தேர்வுக்குழு அமைப்பாளர் பொறுப்புகளை வகித்துத்துள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சில காலம் அறிஞர் தமிழண்ணல் முயற்சியால்  பேராசிரியராகப் பணிபுரிந்தார். முன்னாள் அமைச்சர் பெருமக்கள்  முனைவர் மு. தமிழ்க்குடிமகன், டாக்டர் கா. காளிமுத்து உள்ளிட்ட அரசியல் சார்புற்ற தமிழ் அறிஞர்கள் இரா.இளங்குமரனாரைப் போற்றியவர்கள். தமிழ்வழிக் கல்விக்காகவும் குறளியக் கருத்துக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தவர். திருச்சிராப்பள்ளிக்கு மேற்கில் காவிரிக்கரையின் தென்புறம் அல்லூர்  திருவள்ளுவர் தவச்சாலை, பாவாணர் நூலகம் ஆகியவற்றை நடத்தி வந்தார். தமிழகம் முழுவதும் திருக்குறள் உரைப்பொழிவுகள் வழங்கியும் திருமணங்களைத் தமிழ்வழியில் நடத்தினார்.

தமிழக அரசு இவர் தம் தமிழ்ப்பணிக்கு, விருதுகளை வழங்கியுள்ளது.  வயோதிகம் காரணமாக தனது 94வது வயதில் மதுரை திருநகரில் உள்ள வீட்டில் நேற்றுக்  காலமானார்.    "வழவையம் ஊரில் பொன்றா வாய்மையே உயிராய் நின்ற     உழவராம் படிக்கராமர் உயிரிளங்குமரனார் "

இனி தன் எழுத்தால் தமிழால் மட்டுமே இயங்குவார்!

வாழவந்தாள்புரம் என்ற குக்கிராமத்தில் பிறந்து தமிழை வாழவைக்க வந்தான் இந்த இளங்குமரன்!

ஒவ்வொரு தமிழ்ச்சொல்லையும் உடைத்துப் பார்த்து உரை எழுதிச் செதுக்கிய உளி அவர்!

ஒவ்வொரு எழுத்திலும் புதுமொழி உருவாக்கிய கரு அவர் விரல்கள்!

மறைமலையார் திருவிக இலக்குவனார் பாவாணர் நால்வர் உருவாக்கிய சிலை இவர்!


தமிழியமும் வள்ளுவமும் அவரே இளங்குவனார்!                                  தமிழ்வழிக் கல்விக்காகவும் குறளியக் கருத்துக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தவர் முதுபெரும் தமிழறிஞர் புலவர் இரா.இளங்குமரனார். நேற்று, தனது 94 வது வயதில், முதுமையின் காரணமாகக் காலமான அவரது இழப்பு தமிழர்க்குப் பேரிழப்பு. குறள் உள்ளவரை செந்தமிழ் உள்ளவரை அவர் புகழ் வாழும்.

அன்னாரது தமிழ்நாடு முதல்வர் செய்தியில் 'தமிழே உயிர்மூச்சென வாழ்ந்த அய்யா இளங்குமரனார் அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு!

500-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர்; சமஸ்கிருத மந்திரங்கள் தவிர்த்து திருக்குறள் ஓதி - தமிழில் வாழ்த்தி திருமணங்களை நடத்தியவர்.

அரசு மரியாதையுடன் அய்யாவின் இறுதி நிகழ்வு நடைபெறும் என அறிவித்துள்ளார்.                                  பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா