தமிழ்நாடு காவல் துறையில்
ஒரு இலட்சத்து 11,897 நபர்கள் பணி செய்வதில் தலைமைக் காவலர்கள், இரண்டாம் நிலை மற்றும் முதல் நிலை காவலர்கள் 86,757 நபர்களாவர். சிறப்புக் காவல் படை பிரிவில் 13,526 நபர்களும், உதவி ஆய்வாளர்களும் அவர்களுக்கு மேல் பொறுப்பிலுள்ளவர்களைத் தவிர, தலைமைக் காவலர்கள், இரண்டு மற்றும் முதல் நிலைக் காவலர்கள், சிறப்புக் காவல் படை பிரிவினர்களென ஒரு லட்சத்து 283 நபர்கள் தமிழ்நாடு காவல்துறைப் பணியிலுள்ளவர்களில் பிறந்த மாவட்டத்தை விட்டுப் பிரிந்து பிற மாவட்டங்களில் பணிபுரிகின்றனர். இவர்கள் சில ஆண்டுகள் வேறு மாவட்டங்களில் பணிபுரிந்த பின்னர் மீண்டும் சொந்த மாவட்டத்திலேயே பணி புரிய அனுமதிக்கப்படுவர்.
பெற்றோர்கள் மற்றும் மனைவி பிள்ளைகளைப் பிரிந்து வேறிடங்களில் பணிபுரிபவர்களுக்குஅவர்களது விருப்பத்தின் படி இடமாறுதல் வழங்கப்படும். இதற்கு காவலர்கள் தங்களது சுய விருப்பத்தின் பேரில் இடமாற்றம் கேட்டு,காவல் துறை தலைமை அலுவலகத்தில் விண்ணப்பித்தவர்களில் 1,120 காவலர்களுக்கு இடமாற்றம் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
காவலர்களின் பணியிட மாற்ற உத்தரவை காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு இ கா ப நேற்று வெளியிட்டார்.



கருத்துகள்