கொவிட்-19 நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 47.22 கோடி கொவிட் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 47.22 கோடி கொவிட் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தம் 3,08,57,467 பேர் குணமடைந்துள்ளனர்.
குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.35%.
கடந்த 24 மணி நேரத்தில் 36,946 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 40,134 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,13,718 ஆக உள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1.31%.
வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 5%க்கும் குறைவாக, 2.37%ஆக உள்ளது.
தினசரி தொற்று உறுதி வீதம் 5%க்கும் கீழ், 2.81%ஆக பதிவாகியுள்ளது.
இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 46.96 கோடியாக அதிகரித்துள்ளது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் சுமார் 49.64 கோடி கொவிட் தடுப்பூசிகள் விநியோகம்
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு இதுவரை, 49.64 கோடிக்கும் அதிகமான (49,64,98,050) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் கூடுதலாக 9,84,610 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன.
சுமார் 3.14 கோடி (3,14,34,654) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இந்தியாவின் கொவிட் தடுப்பூசி எண்ணிக்கை: 47.22 கோடியைக் கடந்தது
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 47.22 கோடியைக் கடந்துள்ளது. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 55,99,690 முகாம்களில் 47,22,23,639 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 17,06,598 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
நம் நாட்டில் இதுவரை மொத்தம் 3,08,57,467 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 36,946 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.35 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 40,134 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
தொடர்ந்து 36 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.
இந்தியாவில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,13,718 ஆக உள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.31 சதவீதமாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 14,28,984 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 46,96,45,494 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 2.37 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.81 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 56 நாட்களாக இந்த எண்ணிக்கை ஐந்து சதவீதத்திற்குக் குறைவாக ஏற்பட்டுள்ளது.







கருத்துகள்