முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பள்ளிக் கல்விக்கான முழுமையான கல்வித் திட்டத்தை 2021 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 5 ஆண்டுகளுக்குத் தொடர, மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு பள்ளிக் கல்விக்கான முழுமையான கல்வி (சமக்ர சிக்‌ஷா) திட்டத்தை 2021 ஏப்ரல் 1ம் தேதி முதல் 2026 மார்ச் 31ம் தேதி வரை 5 ஆண்டுகளுக்கு தொடர, மத்திய அமைச்சரவை ஒப்புதல்



மத்திய அரசின் பங்கு ரூ. 1,85,398.32 கோடி உட்பட இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.2,94,283.04 கோடி

அரசு மற்றும் அரசு உதவி பெறும் 1.16 மில்லியன் பள்ளிகள், 156 மில்லியனுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 5.7 மில்லியன் ஆசிரியர்களுக்கு இத்திட்டம் பயனளிக்கும்

பள்ளி கல்விக்கான முழுமையான கல்வி (சமக்ரா சிக்‌ஷா ) திட்டத்தை 2021-22ம் ஆண்டு முதல் 2025-26ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு தொடர பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு அனுமதி அளித்துள்ளது.  மத்திய அரசின் பங்கு ரூ..1,85,398.32  கோடி உட்பட, இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.2,94,283.04  கோடி.


பயன்கள்:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் 1.16 மில்லியன் பள்ளிகள், 156 மில்லியனுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 5.7 மில்லியன் ஆசிரியர்களுக்கு இத்திட்டம் பயனளிக்கும். ( ஆரம்ப பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை)

விவரங்கள்:

* இந்த திட்டம் கல்விக்கான நிலையான மேம்பாட்டு இலக்குக்கு (SDG-4) தகுந்தபடி உள்ளது. தற்போது   தேசிய கல்வி கொள்கை (NEP) 2020 உடன் இணக்கமான மற்றும் சமமான, தரமான மற்றும் முழுமையான பள்ளிக் கல்வியை உறுதி செய்கிறது.

* இத்திட்டம் அனைத்து குழந்தைகளும் சமமான மற்றும் அனைத்தும் உள்ளடக்கிய வகுப்பறை சூழலுடன், தரமான கல்வியைப் பெறுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  இது குழந்தைகளின் மாறுபட்ட பின்னணி, பன்மொழித் தேவைகள், வெவ்வேறு கல்வித் திறன்கள் ஆகியவற்றைக் கவனித்து,  அவர்களை கற்கும் நடைமுறையில், தீவிர பங்கேற்பாளர்களாக ஆக்குகிறது.

* முழுமையான கல்வி திட்டம்  தீவிரமாக அமல்படுத்துவதை உறுதி செய்யவும், கடைக்கோடி வரை சென்றடையவும், முழுமையான கல்வி திட்டத்தின் ஒவ்வொரு அம்சத்துக்கும்  அளவிடக்கூடிய, முக்கிய செயல்பாட்டு அளவீடுகள்  உருவாக்கப்பட்டுள்ளன.

தேசிய கல்விக் கொள்கை 2020 பரிந்துரை அடிப்படையில், மாற்றியமைக்கப்பட்ட சமக்ர சிக்‌ஷா திட்டத்தில், புதிய விஷயங்கள் இணைக்கப்பட்டுள்ளன

1. ஆரம்ப கல்விக்கு முந்தைய நிலை:

* அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சியளிக்க, மாஸ்டர் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி. ஆரம்ப கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி.

* அரசு ஆரம்ப பள்ளிகளில் குழந்தைகள் கற்பதற்கான பொருட்கள், உள்நாட்டு பொம்மைகள் மற்றும் விளையாட்டு பொருட்கள் வாங்க ஆண்டுக்கு ஒரு குழந்தைக்கு ரூ.500 வரை செலவு செய்யும் வசதி.

* அரசு ஆரம்ப பள்ளிகளில், ஆரம்ப கல்விக்கு முந்தைய பிரிவுக்கு உதவி.

2. நிபுன் பாரத் திட்டத்துக்கு உதவி:

3வது கிரேடு முடிவில், ஒவ்வொரு குழந்தையும் படித்தல், எழுதுதல் மற்றும் எண்ணறிவு ஆகியவற்றில் விரும்பத்தக்க திறன்களை உறுதி செய்ய அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணறிவுக்கான தேசிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

* இதற்காக ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.500 வரை செலவு செய்யும் வசதி, ஆசிரியர்களுக்கான புத்தகங்கள் மற்றும் பொருட்கள் வாங்க தலா ரூ.150, ஒரு மாவட்டத்துக்கு ரூ.10 முதல் 20 லட்சம் செலவு செய்யும் வசதி இதில் உள்ளது.

* அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணறிவை ஆரம்ப கல்விக்கு முந்தைய பிரிவு குழந்தைகளுக்கு கற்பிக்க நிஷ்தா திட்டத்தின் கீழ் ஆரம்ப கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

3. தொடக்க நிலை கல்வி: மாநிலங்களில் உள்ள தொடக்க பள்ளிகளில் குழந்தைகளின் உரிமையை பாதுகாக்க மாநில ஆணையத்துக்கு ஒரு பள்ளிக்கு ரூ.50 என்ற அளவில் நிதி உதவி அளிக்கப்படும்.

* மாணவர்களுக்கான பயன்கள் குறுகிய காலத்தில் நேரடியாக சென்றடைய அதிக வலியுறுத்தல்  அளிக்கப்படும்.

4. மேல் நிலை:

* மேல்நிலைக் கல்வி வரை செல்வதை பொதுவானதாக மாற்றப்படுகிறது.

* மேல்நிலைப் பள்ளிகளில், துணைப்பாட பிரிவுகளுக்கு பதில், புதிய பாடப்பிரிவுகளை சேர்த்தல்.

* போக்குவரத்து வசதி மேல்நிலைப்பள்ளி வரை நீட்டிப்பு. ஆண்டுக்கு ரூ.6ஆயிரம் வரை செலவிடப்படும். 

* பள்ளிகளுக்கு வெளியேயுள்ள 16 முதல் 19 வயது வரையுள்ள  பட்டியலின மற்றும் பழங்குடியின குழந்தைகள்,  மாற்றுத்திறனாளி குழந்தைகள் மேல் நிலைப்படிப்பை முடிக்க ஒரு குழந்தைக்கு ரூ.2000 வரை திறந்தவெளி பள்ளிகள் ( NIOS/SOS) மூலம் வழங்கப்படும். 

5. அனைத்து நிலைகளிலும் தரம் மற்றும் புத்தாக்கம்:

* முழுமையான, முன்னேற்றத்தை தெரிவிக்கும் பல பரிமாண அறிக்கை, முழுமையான மதிப்பெண் அட்டை  (HPC) வடிவில் அறிமுகப்படுத்தப்படும்.

* தேசிய அளவில் கேலோ இந்தியா பள்ளி விளையாட்டுகளில் குறைந்தது 2 மாணவர்கள் பதக்கம் பெற்றால் அந்த பள்ளிகளுக்கு ரூ.25,000 வரை கூடுதல் விளையாட்டு மானியமாக அளிக்கப்படும்.

* பைகள் இன்றி பள்ளிக் செல்லும் வகையில் பாடத்திட்டம், மற்றும் கற்பித்தல் சீர்திருத்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

* ஆரம்ப கல்வி முதல் பிளஸ் 2 ஆசிரியர்கள் வரை அனைவருக்கும் தொழில் மேம்பாட்டு பயிற்சி. 

6. சமநிலை மற்றும் உள்ளடக்கம்:

* அனைத்து பள்ளிகளும் மேல் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

* 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவிகளுக்கான விடுதிகளுக்கு ஆண்டுக்கு ரூ.40 லட்சம் வரை அளிக்கப்படும். (முன்பு ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை வழங்கப்பட்டது)

* மாணவிகளின் விடுதிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் மற்றும் இன்சினிரேட்டர் ஆகியவை வழங்கப்படும்.

* சுய பாதுகாப்பு திறனை வளர்த்துக் கொள்ள  3 மாத பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டம் ராணி லட்சுமிபாய் ஆத்ம ரக்‌ஷா பிரசிக்‌ஷன் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதற்கான தொகை மாதம் ஒன்றுக்கு ரூ.3,000-லிருந்து ரூ.5,000-மாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

7. தொழில் கல்வி:

தொழில் கல்விக்கான உதவி, அரசு பள்ளிகளோடு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

* பள்ளிகளில் உள்ள தொழில்கல்விக்கான வகுப்பறை மற்றும் பயிலரங்கம், அருகில் உள்ள இதர பள்ளிகளுக்கும் பயிற்சி மையமாக சேவையாற்றும். 

8. தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப  (ICT ) பரிசோதனைக் கூடங்கள் மற்றும் டிஜிட்டல் நடவடிக்கைகள்:

* ஐசிடி பரிசோதனை கூடங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், காணொலி காட்சி வகுப்பறைகள் மற்றும் டிடிஎச் சேனல்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

9. சமூக தணிக்கைக்கு உதவி: இத்திட்டம் ஆண்டுக்கு 20 சதவீத பள்ளிகளில் செயல்படுத்தப்படும். 5 ஆண்டுகளில் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படும். இத்திட்டத்தில் தன்னார்வ இளைஞர்கள், மாணவர்கள் ஈடுபடுவர்.

10. மொழி ஆசிரியர்கள் நியமனம்: இத்திட்டத்தில் மொழி ஆசிரியர்கள் நியமனம் என்ற புதிய அம்சம்  சேர்க்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கான பயிற்சி அம்சங்கள் மற்றும் இரட்டை மொழி பாடப்புத்தகங்கள் மற்றும் கற்பிக்கும், கற்றல் உபகரணங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தி மற்றும் உருது ஆசிரியர்களுக்கான சம்பளத்துக்கும் உதவி அளிக்கப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இளையாத்தங்குடியில் கோலப் புரட்சி, மீனா ஆச்சி -லீலா மாமி குழு தந்த வண்ண மாட்சி!

 * இளையாத்தங்குடியில் * *மீனா ஆச்சி - லீலா மாமி குழு செய்த கோலப் புரட்சி! இளையாத்தங்குடி கைலாஷநாதர் - நித்யகல்யாணி அம்மன் ஆலயத்தில் அதிசயம்! பகுதி 1: பிரத்யேகம் - தற்போது பிரபலமான நிகழ்வாக நடைபெறும் கோலச் சேவை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் திருநகருக்கு அருகில் அமைந்துள்ள இளையாத்தங்குடி அருள்மிகு கைலாசநாதர் நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில் தற்போது பக்தர்கள் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் பிரபலமான நிகழ்வாக நகரத்தார் பெண்கள் குழுவினரின் கோலச் சேவை நடைபெற்று வருகிறது. இவர்கள் திருப்பணி ஏற்கனவே நாம் பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் கண்டு பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் வெளியிட்ட நிலையில், தற்போது இளையாத்தங்குடி கைலாசநாதர் நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில் இது பிரபலமான நிகழ்வாக நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாற்பது பெண்கள் அடங்கிய குழுவினர் செம்மை, பசுமை, மஞ்சள், நீலம், ஊதா என பல்வேறு வண்ணப் பொடிகளைக் கொண்டு, நுண்ணிய புள்ளிகள் வைத்து, சிக்குக் கோலங்கள், பூக்கோலங்கள், தாமரைக் கோலங்கள், கிளிக் கோலங்கள் இட்டு, கருங்கல் தரையை வண்ண ஓவியமாக மாற்றி வருகின்றனர். தலைம...

எட்டு லட்சம் மரங்களை நட்டவர், எண்ணற்ற மனிதர்களை வளர்க்கிறார்!

 --- *புண்ணியவாசலில் புண்ணியம் செய்யும் வாசல் - அன்பாலயம்!* *பப்ளிக் ஜஸ்டிஸ் ஆசிரியர் கவிஞர் சீ.க. புலித்தேவன் பாண்டியன் பிறந்தநாள் - பசுமை நாயகன் மரம் ராஜா பங்கேற்ற நெகிழ்ச்சி விழா!* *புதுக்கோட்டை, ஆவுடையார்கோவில் புண்ணியவாசல்:* தமிழ்நாட்டில் ஆயிரம் முதியோர் இல்லங்கள் உண்டு. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் அருகே புண்ணியவாசலில் இயங்கும் *"மரம் அறக்கட்டளையின் அன்பாலயம் - ஆதரவற்ற முதியோர் இல்லம் (Regd No: 26/2019)"* போல ஒரு இல்லத்தை எங்கும் காண முடியாது! * காரணம் என்ன தெரியுமா? * > இங்கே சுத்தம் உண்டு, சுகாதாரம் உண்டு, > அதையும் தாண்டி அன்பு உண்டு, கருணை உண்டு, > கண்ணீரைத் துடைக்கும் பாசம் உண்டு! *இதன் ஆணிவேர் யார் தெரியுமா?* நாம் பார்த்த புகைப்படங்களின் பின்னணியில் இருக்கும் உண்மையான ஹீரோ *திரு. S.R.M. ராஜா - அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் "மரம் ராஜா"* தான்! - புதுக்கோட்டை மண்ணில் மட்டும் *8 லட்சம் மரங்களை* நட்டு, தண்ணீர் ஊற்றி தன் பிள்ளைகள் போல வளர்த்த பசுமை நாயகன்! - அந்த பசுமை நாயகன் தான் *"மரம் அறக்கட்டளை"* நிறுவனர்! - மரம் வளர்த...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...