ஒலிம்பிக் 2021 வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டம் 12 ஆவது ஒலிம்பிக் பதக்கத்தை வென்றது
ஒலிம்பிக் 2021 வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டம்.
41 ஆண்டு காத்திருப்பு தற்போது முடிவுக்கு வந்ததுடன். ஆண்கள் ஹாக்கியில் 12 ஆவது ஒலிம்பிக் பதக்கத்தை வென்றிருக்கும் இந்திய ஹாக்கி அணிக்கு பாராட்டுகள் குவிகின்றன இந்த வெற்றியுடன் இந்திய ஹாக்கி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது.பிரதமர் அலுவலகம்
2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு பிரதமர் வாழ்த்து
2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சாதனையின் மூலம், ஒட்டுமொத்த தேசத்தின், குறிப்பாக நமது இளைஞர்களின் கற்பனையை அவர்கள் கைப்பற்றியுள்ளனர் என்றும் பிரதமர் கூறினார்.
இது தொடர்பாக, பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் கூறியுள்ளதாவது :
"வரலாற்று நிகழ்வு ! ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் பொறிக்கப்படும் ஒரு நாள்.
வெண்கலத்தை தாயகத்திற்குக் கொண்டு வந்த நமது ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள். இந்தச் சாதனையின் மூலம், ஒட்டுமொத்த தேசத்தின், குறிப்பாக நமது இளைஞர்களின் கற்பனையை அவர்கள் கைப்பற்றியுள்ளனர். நமது ஹாக்கி அணியால் இந்தியா பெருமை கொள்கிறது. " பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள மற்றொரு தகவலில்
மன உறுதியுடன் விளையாடிய பெண்கள் ஹாக்கி அணி சிறப்பான திறனை வெளிப்படுத்தியது: பிரதமர்
இன்றும் இதர போட்டிகளிலும் மன உறுதியுடன் விளையாடிய நமது பெண்கள் ஹாக்கி அணி டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் சிறப்பான திறனை வெளிப்படுத்தியது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். அணி குறித்து தாம் பெருமைப்படுவதாகக் கூறிய பிரதமர், எதிர்வரும் போட்டிக்கும் வருங்கால முயற்சிகளுக்கும் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார்.
இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், “டோக்கியோ2020 குறித்து நாம் நினைவில் வைத்துக்கொள்ளப் போகும் விஷயங்களில் ஒன்றாக நமது ஹாக்கி அணிகளின் சிறப்பான விளையாட்டு இருக்கும்.
இன்றும் இதர போட்டிகளிலும் மன உறுதியுடன் விளையாடிய நமது பெண்கள் ஹாக்கி அணி, சிறப்பான திறனை வெளிப்படுத்தியது. அணி குறித்து பெருமைப்படுகிறேன். எதிர்வரும் போட்டிக்கும் வருங்கால முயற்சிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்,” என்று கூறியுள்ளார்.







கருத்துகள்