35 நிலநடுக்க ஆய்வு மையங்களுடன் 2026-க்குள் 100 மையங்கள் கூடுதலாக அமைக்கப்படும்: டாக்டர் ஜிதேந்திர சிங்

புவி அறிவியல் அமைச்சகம் இந்த வருடத்திற்குள் மேலும் 35 நிலநடுக்க ஆய்வு மையங்களும் 2026-க்குள் இன்னும் 100 நிலநடுக்க ஆய்வு மையங்களும் அமைக்கப்படும்: டாக்டர் ஜிதேந்திர சிங்இந்த வருடத்திற்குள் மேலும் 35 நிலநடுக்க ஆய்வு மையங்களும் 2026-க்குள் இன்னும் 100 நிலநடுக்க ஆய்வு மையங்களும் இந்தியாவில் அமைக்கப்படும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

சுதந்திரம் அடைந்து கடந்த ஆறரை தசாப்தங்களில் வெறும் 115 நிலநடுக்க ஆய்வு மையங்கள் மட்டுமே நாட்டில் அமைக்கப்பட்டது என்றும், ஆனால் தற்போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நிலநடுக்க ஆய்வு மையங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்க போகிறது என்றும் அவர் கூறினார்.

புவியீர்ப்புவியல் மற்றும் வானியல் சர்வதேச சங்கம் மற்றும் பூமியின் உட்புற பகுதியின் நில அதிர்வு மற்றும் இயற்பியலுக்கான சர்வதேச சங்கத்தின் கூட்டு அறிவியல் சபையின் தொடக்கவிழாவில் இன்று பேசிய அமைச்சர், நிலநடுக்கம், நிலச்சரிவு, புயல்கள், வெள்ளம் மற்றும் சுனாமி ஆகிய பேரிடர்கள் அதிகம் தாக்கும் பகுதிகளில் ஒன்றாக இந்தியா விளங்குவதாக கூறினார். இந்த சவால்களை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் எடுத்து வருகிறது.

பூமித்தாய் உடனான பல்வேறு கட்டங்களிலான உரையாடல்களில் மனித இனம் சவால்களை எதிர் கொள்வதால், நமது பூமி குறித்த விஷயங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட அறிவியலான புவியியல் அதன் சிகரத்தை தற்போது எட்டியுள்ளதாக திரு சிங் தெரிவித்தார். 

சமுதாயத்திற்கு அறிவியலை வழங்குவதற்கான விஷயங்கள் மீது பணிபுரிவதற்காக சர்வதேச சமுதாயத்திலிருந்து அதிக அளவிலான ஆராய்ச்சியாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களை ஒன்றிணைப்பதற்கான கிரியா ஊக்கியாக புவியீர்ப்புவியல் மற்றும் வானியல் சர்வதேச சங்கம் மற்றும் பூமியின் உட்புற பகுதியின் நில அதிர்வு மற்றும் இயற்பியலுக்கான சர்வதேச சங்கத்தின் கூட்டு அறிவியல் சபை திகழும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்