முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கும்பகோணத்தில் ரூ.600 கோடி மோசடி செய்த தலைமறைவுக் குற்றவாளிகள் வேந்தன் பட்டியில் கைது

கும்பகோணத்தில் ரூ.600 கோடி மோசடி செய்த தலைமறைவுக் குற்றவாளிகளான கும்பகோணம்`ஹெலிகாப்டர் சகோதரர்கள்' புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்பட்டியில் கைது.




தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள்


மீது நிதி நிறுவனம் நடத்தி ரூபாய் 600 கோடியை மோசடி செய்த புகாரில் பதியப்பட்ட வழக்கில்  குற்றவாளியாகத் தேடப்பட்ட  இருவரும் தலைமறைவாக இருந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்மராவதியில் வட்டத்தில் வழக்குரைஞர் தொழில் செய்யும் ஒருவரின் விவசாயப் பண்ணையில் மறைத்திருந்த இருவரையும் இன்று மூன்று தனிப்படைக் காவல்துறை சுற்றி வளைத்துக் கைது செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பானது.

















கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் எம்.ஆர்.கணேஷ். மற்றொறுவர் எம்.ஆர் சுவாமி நாதன் இவர்கள் விக்டரி பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம், கிரிஷ் பால்பண்ணை என பல தொழில்கள் செய்கின்றனர். எப்போதும் இந்த கும்பகோணம் எத்தர்களான இவர்கள் இருவரும்  ஹெலிகாப்டரிலேயே வந்ததால் `ஹெலிகாப்டர் பிரதர்ஸ்' என கும்பகோணம் மக்களால் அழைக்கத் துவங்கினர். தங்களது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகத் திருப்பித் தரப்படும் என ஆசைகளை மக்களிடம் கூறி விளம்பரங்கள் செய்து கும்பகோணத்தை சேர்ந்த பலரிடம் நிதி வசூலில் ஈடுபட்டு தனவந்தர்கள், வர்த்தகர்கள், கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் என பலரும் கோடிக் கணக்கில் அவர்களிடம் வருமான வரித்துறைக்குத் தெரியாமல் முதலீடு செய்தனர். அவர்கள் பாஜகவிலும் சேர்ந்திருக்கும் காரணத்தால் இவர்களை நம்பி கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த தம்பதியான ஜபருல்லா - பைரோஜ்பானு ஆகியோர் ரூபாய் 15 கோடியை இந்த இரட்டையர் மோசடி செய்து விட்டதாகவும், பணத்தைத் திருப்பி கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுப்பதாகவும் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில்.  இருவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களது பால்பண்ணையில் பணிபுரியும் ஊழியர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் இவர்கள் மீது புகார் கொடுத்தனர்.


கும்பகோணத்தில் இந்த இரண்டு எத்தர்களின் மீதும்  ரூபாய்.600 கோடிக்கு மேல் மோசடிக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து இருவரில் ஒருவர்

வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த 12 சொகுசுக்கார்களைப் பறிமுதல் செய்யப் பட்டதுடன் எம்.ஆர்.கணேஷ் மனைவி அகிலா உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டவர்களைக் கைதும் செய்தனர்.  தலைமறைவாக இருந்த இரண்டு மோசடி ஹெலிகாப்டர் சகோதரர்கள் சிக்கவில்லை தனிப்படை காவல்துறையினர்  தேடி வந்தனர். சென்னை, பாண்டிச்சேரி, வடலூர் உள்ளிட்ட இடங்களில் செல்போன் காட்டிய சமிக்ஞைகளை  வைத்து ஆய்வு செய்து தேடிங் சென்ற தேடுதல் வேட்டையில்  சிக்காத இந்த மோசடி குற்றச்சாட்டில் ஈடுபட்டவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமாராவதி வட்டத்தில் வேந்தன்பட்டி கிராமத்தில் வழக்குரைஞர் ஒருவரது விவசாய பண்ணை வீட்டில் தங்கி ஒளிந்திருப்பதாக தகவல் வரவே இன்று மூன்று தனிப்படை காவல்துறை குழு வேந்தன்பட்டி பண்ணைவீட்டைச் சுற்றி வளைத்துக் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 13 பேக்கும்,உயர் ரக கார்களும் ,செல் போன் உள்ளிட்ட பொருட்களைப் பறிமுதல் செய்தனர். பின்னர் தஞ்சாவூர் குற்றப்பிரிவு அலுவகத்திற்கு கொண்டு சென்ற பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவித்த நிலையில் இன்னும் பல விபரங்கள் விரைவில் வெளிவரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இளையாத்தங்குடியில் கோலப் புரட்சி, மீனா ஆச்சி -லீலா மாமி குழு தந்த வண்ண மாட்சி!

 * இளையாத்தங்குடியில் * *மீனா ஆச்சி - லீலா மாமி குழு செய்த கோலப் புரட்சி! இளையாத்தங்குடி கைலாஷநாதர் - நித்யகல்யாணி அம்மன் ஆலயத்தில் அதிசயம்! பகுதி 1: பிரத்யேகம் - தற்போது பிரபலமான நிகழ்வாக நடைபெறும் கோலச் சேவை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் திருநகருக்கு அருகில் அமைந்துள்ள இளையாத்தங்குடி அருள்மிகு கைலாசநாதர் நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில் தற்போது பக்தர்கள் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் பிரபலமான நிகழ்வாக நகரத்தார் பெண்கள் குழுவினரின் கோலச் சேவை நடைபெற்று வருகிறது. இவர்கள் திருப்பணி ஏற்கனவே நாம் பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் கண்டு பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் வெளியிட்ட நிலையில், தற்போது இளையாத்தங்குடி கைலாசநாதர் நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில் இது பிரபலமான நிகழ்வாக நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாற்பது பெண்கள் அடங்கிய குழுவினர் செம்மை, பசுமை, மஞ்சள், நீலம், ஊதா என பல்வேறு வண்ணப் பொடிகளைக் கொண்டு, நுண்ணிய புள்ளிகள் வைத்து, சிக்குக் கோலங்கள், பூக்கோலங்கள், தாமரைக் கோலங்கள், கிளிக் கோலங்கள் இட்டு, கருங்கல் தரையை வண்ண ஓவியமாக மாற்றி வருகின்றனர். தலைம...

எட்டு லட்சம் மரங்களை நட்டவர், எண்ணற்ற மனிதர்களை வளர்க்கிறார்!

 --- *புண்ணியவாசலில் புண்ணியம் செய்யும் வாசல் - அன்பாலயம்!* *பப்ளிக் ஜஸ்டிஸ் ஆசிரியர் கவிஞர் சீ.க. புலித்தேவன் பாண்டியன் பிறந்தநாள் - பசுமை நாயகன் மரம் ராஜா பங்கேற்ற நெகிழ்ச்சி விழா!* *புதுக்கோட்டை, ஆவுடையார்கோவில் புண்ணியவாசல்:* தமிழ்நாட்டில் ஆயிரம் முதியோர் இல்லங்கள் உண்டு. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் அருகே புண்ணியவாசலில் இயங்கும் *"மரம் அறக்கட்டளையின் அன்பாலயம் - ஆதரவற்ற முதியோர் இல்லம் (Regd No: 26/2019)"* போல ஒரு இல்லத்தை எங்கும் காண முடியாது! * காரணம் என்ன தெரியுமா? * > இங்கே சுத்தம் உண்டு, சுகாதாரம் உண்டு, > அதையும் தாண்டி அன்பு உண்டு, கருணை உண்டு, > கண்ணீரைத் துடைக்கும் பாசம் உண்டு! *இதன் ஆணிவேர் யார் தெரியுமா?* நாம் பார்த்த புகைப்படங்களின் பின்னணியில் இருக்கும் உண்மையான ஹீரோ *திரு. S.R.M. ராஜா - அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் "மரம் ராஜா"* தான்! - புதுக்கோட்டை மண்ணில் மட்டும் *8 லட்சம் மரங்களை* நட்டு, தண்ணீர் ஊற்றி தன் பிள்ளைகள் போல வளர்த்த பசுமை நாயகன்! - அந்த பசுமை நாயகன் தான் *"மரம் அறக்கட்டளை"* நிறுவனர்! - மரம் வளர்த...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...