கடற்படை துணைத் தளபதியாக வைஸ் அட்மிரல் எஸ்.என். கோர்மதே பதவியேற்பு

பாதுகாப்பு அமைச்சகம் கடற்படை துணைத் தளபதியாக வைஸ் அட்மிரல் எஸ்.என். கோர்மதே பதவியேற்பு

கடற்படையில் 39 ஆண்டு சேவைகளுக்குப்பின் துணை தளபதி பொறுப்பில் இருந்து இன்று ஓய்வு பெற்ற  வைஸ் அட்மிரல் ஜி. அசோக் குமாரிடம் இருந்து, அப்பொறுப்பை வைஸ் அட்மிரல் எஸ்.என் கோர்மதே, புதுதில்லி சவுத் பிளாக்கில் இன்று நடந்த முறைப்படியான விழாவில் பெற்றுக் கொண்டார். 

வைஸ் அட்மிரல் அந்தஸ்தில், கடற்படை செயல்பாடுகள் தலைமை இயக்குனர், கிழக்கு கடற்படை கட்டுப்பாட்டு மைய தலைமை அதிகாரி, பாதுகாப்புத்துறை பணியாளர் சேவைகள் கட்டுப்பாட்டு அதிகாரி,  போன்ற சவாலான பல பதவிகளை வைஸ் அட்மிரல் எஸ்.என் கோர்மதே வகித்துள்ளார். கடற்படை துணைத் தளபதி பொறுப்பை ஏற்கும் முன்பு, அவர் ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணியாளர் தலைமையகத்தில் முப்படைகளின் செயல்பாடுகள் மற்றும் பயிற்சி பிரிவின் துணைத் தலைவர் பதவியை வகித்தார்.

இவர் அதி விசிஷ்ட் சேவா பதக்கம், இந்திய குடியரசுத் தலைவரிடமிருந்து நவ்சேனா பதக்கம், கடற்படை தளபதியின் பாராட்டு பத்திரம் போன்றவற்றை பெற்றுள்ளார்.

கடற்படையில் 39 ஆண்டுகள் பணியாற்றி, இன்று ஓய்வு பெறும் வைஸ் அட்மிரல் ஜி. அசோக்குமாரின் பணியை வைஸ் அட்மிரல் எஸ்.என் கோர்மதே தொடர்கிறார். கடற்படை துணைத் தளபதியாக வைஸ் அட்மிரல் ஜி. அசோக் குமார் பணியாற்றிய காலத்தில், கடற்படை பட்ஜெட் ஒதுக்கீடு அதிக உயர்வை கண்டது. இவற்றில் 100 சதவீதம் பயன்படுத்தப்பட்டது.  தளவாட கொள்முதலுக்கு உந்துதல் அளிக்கப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா