எளிமைப்படுத்தப்பட்ட காப்புரிமை மற்றும் பதிப்புரிமை பதிவு முறை புதுமைகளின் மையமாக இந்தியா அமைச்சர் பியூஷ் கோயல்

வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் எளிமைப்படுத்தப்பட்ட காப்புரிமை மற்றும் பதிப்புரிமை பதிவு முறை புதுமைகளின் மையமாக இந்தியா உருவாக உதவுகின்றன: திரு பியூஷ் கோயல்


காப்புரிமைகள், வடிவமைப்புகள், பதிப்புரிமைகள் மற்றும் வர்த்தகம் முத்திரைகளை ஆராய்வதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் குறித்து திருப்தி தெரிவித்த மத்திய வர்த்தகம், தொழில்கள், நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் ஜவுளி அமைச்சர் திரு பியூஷ் கோயல், புதுமைகளின் மையமாக இந்தியா உருவாவதற்கு 'வர்த்தகம் செய்வதை எளிதாக்குதல்' பெரிய அளவில் உதவும் என்றார்.

மும்பையில் உள்ள காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகளின் தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்தின் செயல்பாடுகளை நேற்று ஆய்வு செய்த அமைச்சர், வலிமை மற்றும் துடிப்பு மிக்க அறிவுசார் சொத்துரிமை உள்கட்டமைப்பை நிறுவுவதற்கான வழிகள் குறித்து ஆராய்ந்தார்.

புது நிறுவனங்கள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், பெண் தொழில் முனைவோருக்கான கட்டணங்கள் 80 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளன:

நாட்டில் உள்ள புது நிறுவனங்கள் மற்றும் பெண் தொழில்முனைவோருக்கு உதவியும் ஆதரவும் அளிப்பதற்காக கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக திரு கோயல் கூறினார். புது நிறுவனங்கள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், பெண் தொழில் முனைவோருக்கான பதிவு கட்டணங்கள் 80 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

எளிமைப்படுத்தப்பட்ட செயல் முறை, வளரும் புதுமைகள்:

அறிவுசார் சொத்துரிமை செயல்முறை முன்பை விட எவ்வாறு எளிமை மற்றும் முறைப்படுத்தப்பட்டுள்ளது என்று விளக்கிய அலுவலர்கள் காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகளின் தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்தின் அலுவலர்கள், பதிவு செய்தல் மற்றும் சேவைகளை பெறுவதை எளிமை படுத்துவதற்காக முடிவெடுப்பதற்கான கால அளவு மற்றும் டிஜிட்டல் முறைக்கு மாறுதல் உள்ளிட்ட ஒட்டுமொத்த செயல்முறையும் மறுசீரமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.


உதாரணத்திற்கு, வர்த்தக முத்திரை விதிகளின் கீழ் முன்பிருந்த 74 படிவங்கள் 8 ஒருங்கிணைந்த படிவங்களாக மாற்றப்பட்டுள்ளன.கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா