நடிகை சோனியா அகர்வால் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சாவால் கைது
நடிகை சோனியா அகர்வாலின் பெங்களூர் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தியபின் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னட சினிமா பிரபலங்கள் சிலருக்கு போதை பொருள் புழக்கம் இருந்து சில மாதங்களாகவே வெளியே வருகிறது. பிரபலங்கள் பலரும் சிக்குகின்றனர்.
ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி நைஜீரிய நாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் விற்பனையாளர் தாமஸ் காலுவை கோவிந்த்புரா காவல்துறையினர் கைது செய்து. அவரிடமிருந்த 1.50 லட்சம் மதிப்புள்ள 403 x டெக் மாத்திரைகளைக் கைப்பற்றினர்.
அவர் இந்த மாத்திரைகளை கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழில் அதிபர்களுக்கு கொடுப்பது தெரிந்தது. மேலும் பிரபலங்கள் பலருக்கும் விலையுயர்ந்த கோகோயின் செயற்கை மருந்துகள் விற்பனை ஆனதும் தெரிந்தது. ஒரு கிராம் கோகோயின் ரூபாய் .15,000 க்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. போதைப்பொருள் விற்பனையாளர் தாமஸ் காலுவுடன் தொடர்பு வைத்திருந்த பல்வேறு பிரபலங்கள் மற்றும் வணிகர்களின் வீடுகளில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். ராஜாஜிநகர், பத்மநாபநகர் மற்றும் பென்சன் டவுனில் உள்ள டிஜே வச்சோன் சின்னப்பா, தொழிலதிபர் பரத், திரைப்பட நடிகை சோனியா அகர்வால் ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தினர்.
கோவிந்த்புரா காவல் நிலையத்தில் கைதி தாமஸ் காலு அளித்த வாக்குமூலத்தின் படி, சோதனைகள் நடந்துள்ளதெனத் தெரியவருகிறது. சோதனையின் அடிப்படையில் ரியல் எஸ்டேட் உரிமையாளர் பரத் என்பவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அழகுசாதனத் தொழிலில் ஈடுபட்டுள்ள கன்னட நடிகை சோனியா அகர்வால் (வயது 40) வீட்டில் நடத்த சோதனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
தொடர்ந்து கன்னட நடிகை சோனியா அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த புகாரில் நடிகை கைது செய்யப்பட்ட நிலையில். அவர் யாருக்கெல்லாம் போதை பொருட்களை வினியோகம் செய்தார், யாரிடமிருந்து பெற்றார் என அறிய விசாரணை நடைபெறுகிறது. மேலும்
பாலிவுட்டில் நிலவிய ட்ரக்ஸ் பார்ட்டி குறித்து காவல்துறையினர் விசாரித்தனர். இதில் ரியா சக்கரவர்த்தி, அவரது சகோதரர் உட்பட பலர் சிக்கினர். ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட பல பிரபலங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
போதைப் பொருள் வழக்கில் கடந்த ஆண்டு நடிகைகள் ராகிணி, சஞ்சனா ஆகியோர் சிக்கினர். அவர்கள் கைது செய்யப்பட்டு பல மாதம் சிறையில் அடைக்கப்பட்டனர். மீண்டும் நடிகை போதை பொருள் சோதனையில் சிக்கி கைது செய்யப்பட்டிருப்பது கன்னட திரையுலகில் பேசும் படியுள்ளது.
கருத்துகள்