நரம்பியல் மருத்துவர் சுப்பையா சென்னை ராஜா அண்ணாமலைப்புரம் விளையாட்டு மைதானத்தில் 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி கூலிக் கொலை காரர்களால் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் எட்டாண்டுகளாக நடந்த நிலையில் இன்று தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளிகள் 9 பேரில் 7 பேருக்கு தூக்குத் தண்டனையும் இருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இவ் வழக்கின் பின்னணி மற்றும் கடந்த வந்த பாதை குறித்துப் பார்க்கலாம்.
அரசு நரம்பியல் துறை மருத்துவராக 5,000 அறுவை சிகிச்சைகள் செய்த நிபுணர் மருத்துவர் சுப்பையா. இவர் கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு சேர்ந்தவர் இவர் தாய்மாமன் பெருமாளுக்கு காதும், வாயும் செயலிழந்ததோடு குழந்தையில்லாத நிலையில் அன்னப்பழம் என்பவரை இரண்டாம் தாரமாக அவர் திருமணம் செய்தார்.திருமணமான சிறிதுநாளிலேயே பெருமாளை தனியாக விட்டு விட்டுச் சென்ற அன்னப்பழம், மூன்று வருடங்கள் கழித்து கையில் குழந்தையுடன் திரும்பி வந்தார். தனக்கும் குழந்தைக்கும் சொத்தில் பங்கு வேண்டுமென பெருமாளிடம் சண்டை போட்டதை ஏற்க மறுத்த பெருமாள் நாடார், தனது சொத்தையெல்லாம் தன்னுடைய சகோதரியும் மருத்துவர் சுப்பையாவின் அம்மாவுமான அன்னக்கிளியின் பெயரில் எழுதி வைத்து விட்டார். சொத்துக்கள் குறித்து பெருமாளின் இரண்டாவது மனைவியான அன்னப்பழம் தரப்பு தொடர்ந்த வழக்கை அன்னக்கிளி தரப்பும் எதிர்கொண்டது. பல ஆண்டுகளாக சிவூல் வழக்கு நடந்த நிலையில் அன்னபழத்திற்கு சாதகமாக தீர்ப்பு வரவே, அந்தத் தீர்ப்பை எதிர்த்து அன்னக்கிளி மேல் முறையீடு செய்த நிலையில், இரு தரப்பும் சமாதானம் செய்து கொண்டதில் அஞ்சுகிராமத்தில் உள்ள இரண்டேகால் ஏக்கர் நிலம் மருத்துவர் சுப்பையாவின் தாய் அன்னக்கிளிக்குக் கிடைக்கிறது. சில வருடங்கள் கழித்து அன்னபழத்தின் மகனான பொன்னுசாமி, தன் தாய் செய்து கொண்ட உடன்படிக்கை செல்லாது என அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தில் தொடர்ந்த சிவில் வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று தள்ளுபடியானது. நீதிமன்ற தீர்ப்பையும் மீறி, அன்னப்பழத்தின் மகன் பொன்னுச்சாமி அந்த நிலத்தை தன் மனைவி மேரி புஷ்பத்தின் பெயரில் செட்டில்மென்ட் பத்திரம் எழுதிக் கொடுக்கிறார். 2013 ஆம் ஆண்டு அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்ற மருத்துவர் சுப்பையா, தனது நிலத்தை மீட்டெடுக்கும் பணியில் இறங்கினார். அப்போது புதிதாக அமைக்கப்பட்டிருந்த காவல்துறை நில அபகரிப்புத் தடுப்பு பிரிவில் புகார் அளித்து நீதிமன்றத்தையும் நாடிய நிலையில். தனது நிலத்தின் மீது யாரும் உரிமை கொண்டாடாமல் இருக்க கீழமை நீதிமன்றத்தில் தடையாணையும் பெற்றார். பின்னர் பொன்னுச்சாமி மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார் மருத்துவர் சுப்பையா.நிலத்தகராறு குறித்து சுப்பையா அளித்திருந்த புகார்களின் அடிப்படையில் பொன்னுசாமியும் அவரின் மனைவி மேரி புஷ்பமும் கைது செய்யப்பட்டனர். 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதியன்று, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த மருத்துவர் சுப்பையாவை, கூலிக் கொலை காரர்கள் கொலை செய்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மருத்துவர் சுப்பையா, செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி உயிரிழந்தார். மருத்துவமனை வெளியே இருந்த சி.சி.டி.வி காணொளிக் காட்சியில் பதிவாகியிருந்த கொலைச் சம்பவக் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியது.
பொன்னுசாமியின் மகன்களில் ஒருவர் வழக்குறைஞர் பேசில், மற்றொருவர் பொறியாளர் போரிஸ் இருவரும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பேசில் நண்பர்களான வழக்கறிஞர் வில்லியம்ஸ், மருத்துவர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிக்கானவர்களாக அறியப்பட்ட ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐயப்பன் அனைவரும் அடுத்தடுத்த ஆண்டுகளில் கைது செய்யப்பட்டனர். இந்தக் கொலை வழக்கில் 2015 ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு. வழக்கில் முன்னேற்றமில்லாமல் இருந்தது. 2017 ஆம் ஆண்டில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக விஜயராஜ் வந்த பின்னர் சாட்சிகள் விசாரணை நடந்தது. அப்ரூவராக மாறிய ஐயப்பன் அளித்த வாக்குமூலம் தான் வழக்கில் முக்கிய ஆதாரமாக மாறிய நிலையில் இதுவரை 57 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 173 ஆவணங்கள், 42 பொருள்கள், 5 நீதிமன்ற ஆவணங்கள், 6 எதிர்தரப்பு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில். தீர்ப்பு எப்போது வெளியாகுமென எதிர்பார்ப்பு எழுந்த சூழலில் மருத்துவர் சுப்பையாவின் மைத்துனர் மோகன் வழக்கை விரைந்து விசாரித்து முடிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடவே மே மாதம் 31 ஆம் தேதி வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அமர்வு, இந்த வழக்கை 2021 ஜூலை 31 ஆம் தேதிக்குள் முடிப்பதற்கு உத்தரவிட்ட நிலையில். மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வாசிக்கப்பட்டது. கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகளென அறிவித்த நீதிபதி, ஏழு பேருக்குத் தூக்கு தண்டனையும், இருவருக்கு ஆயுள்தண்டனையை அறிவித்தார் நீதிபதி. இதில் பொன்னுசாமி, பாசில், வில்லியம், ஜேம்ஸ் சதீஷ்குமார், போரிஸ், முருகன், செல்வபிரகாஷ் ஆகியோருக்கு தூக்குத் தண்டனையும் மேரி புஷ்பம், ஏசு ராஜன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதித்துள்ளார். அப்ரூவரான ஐயப்பன் அரசு சாட்சி என்பதால் அவருக்குத் தண்டனை ஏதும் விதிக்கப்படவில்லை.








கருத்துகள்