அ இ அ தி மு த வின் தற்போதய அவைத்தலைவர் இ. மதுசூதனன் காலமானார்
இவர் ஆந்திரப் பிரதேசம் நெல்லூர் மாவட்டம் காவாலி இவருக்கு பூர்வீகமாகும் இவர் தந்தை காலத்தில் வடசென்னை பகுதியில் குடி வந்தவர் தற்போது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.சேகர்பாபு மனைவி இவரது மகளாவார். ஆரம்ப காலத்தில் தலைவர்களாக இருந்த வண்ணை மு.பாண்டியன் மற்றும் ஜேப்பியார் கால துணை அரசியல் பிரமுகர்களுடன் இருந்து அதிமுக நிறுவனர் தலைவர் முன்னால் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் பொதுச்செயலாளர் இராகவானந்தம் மறைந்து மறைவுக்குப் பின்னர் ஜெ.ஜெயலலிதா பொதுச் செயலாளர் ஆன பிறகு எஸ்.டி.சோமசுந்தரம் போன்ற இரண்டாம் கட்டமாக இருக்கும் தலைவர்கள் காலமாக பின்னர் அவைத்தலைவர் ஆனவர் இ.மதுசூதனன் மற்றும் முன்னாள் தமிழக கைத்தறித்துறை அமைச்சராவார். தமிழக சட்டமன்றத்துக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் 1991 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்று, முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் அமைச்சரவையில் கைத்தறித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றவர் அதிமுகவின் அவைத் தலைவராக இருக்கும் நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக 5 ஆம் தேதி ஆகஸ்டு மாதம் 2021 இன்று சென்னையில் மறைந்தார்.முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அப்போது தமிழக ஆளுநர் டாக்டர் சென்னாரெட்டியால் டாக்டர் சுப்ரமணியன் சுவாமிக்கு அனுமதி வழங்கிய நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக அதிமுக மகளிரணியினர் நடத்திய ஆபாசமான நடவடிக்கைகளைத் தேசம் மறந்துவிடுமா? அல்லது நாம் மறக்க முடியுமா? உச்சகட்டமாக ஐ.ஏ.எஸ். அதிகாரியான சந்திரலேகா மீது சுர்லா என்பவன் ஆசிட் வீச்சு சம்பவத்தில் மதுசூதனன் பெயரும் அடிப்பட்டது மட்டுமல்ல சுர்லாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுசூதனனை சிபிஐ கைதும் செய்தது என்பது கடந்த கால வரலாறு. அன்று
தராசு ஊழியர்கள் படுகொலைச் சம்பவம். முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் வாகனம் மீது தாக்குதல், அண்ணா பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராக முனைவர் அனந்தகிருஷ்ணன் வீடு மீது தாக்குதல், ஜெயலலிதா வீட்டின் அருகில் வசித்த பிரபல மூத்த வழக்கறிஞர் விஜயன் மீதான கொலைவெறித் தாக்குதல், மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரத்தின் மீதான கொலைவெறித் தாக்குதல் இவையெல்லாம் 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டில் முதல்வர் ஜெ.ஜெயலலிதா ஆட்சிக் காலத்து அராஜகத்தின் உச்சங்களும். வரலாற்றின் மிச்சமாகும் இவற்றை செய்து தான் மதுசூதனன், ஆதிராஜாராஜம் வகையறாக்கள்
அப்போது முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம்பிடித்தார்கள் என்பதும் வரலாறு.
ஒரு காலகட்டத்தில் ஜெ.ஜெயலலிதாவால் ஒதுக்கிவைக்கப்பட்டு காலம்போன கடைசிக் காலத்தில் ஜெ. ஜெயலலிதாவாலேயே அதிமுக அவைத் தலைவராக்கப்பட்ட மதுசூதனன்தான் இப்போது காலமானார்.
அஇஅதிமுக அவைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் மறைவுக்கு தமிழகத்தின் முதல்வர்
மற்றும் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல் முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது :
`அஇஅதிமுக அவைத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து வருந்துகிறேன். அன்னாரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
14 வயது முதலே பொது வாழ்வில் அடியெடுத்து வைத்த திரு மதுசூதனன், கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் போற்றும் தலைவராகத் திகழ்ந்தவர் ஆவார்.
அனைவரையும் அரவணைத்துச் செல்லும் உயர்ந்த குணமும், அமைதியும், இயல்பிலேயே கொண்டிருந்த தலைவராக அவர் திகழ்ந்தார்.
மாநில அரசின் கைத்தறித் துறை அமைச்சராகவும் அஇஅதிமுகவின் அவைத் தலைவராகவும் அவர் ஆற்றிய பணிகள் தமிழக வரலாற்றில் நிரந்தர இடம் பிடிக்கும் என்பது உறுதி.
அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை நான் வேண்டிக்கொள்கிறேன்.’என தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் அவைத் தலைவர் பதவியில் இருக்கும் போதே இறந்து விடுகிறார். இ.மது சூதனன்.
பொதுக்குழுவிற்கு அதிமுகவில் அவைத் தலைவர் மிக முக்கியம். அவைத் தலைவரை கட்சியின் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுப்பதாக அறிக்கை வெளியிடுவார் ஜெ. ஜெயலலிதா.
ஆனால் இன்று அதிமுக இருக்கும் நிலையில் அவைத் தலைவரும் இல்லை, பொதுச் செயலாளரும் நீதிமன்றம் வழங்கப்போகும் தீர்ப்புக்காக காத்திருக்க கட்சி தற்போது வீசும் காற்றில் மூடாத கற்பூரம் போல இருக்கிறது.










கருத்துகள்