முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மத்திய அரசின் நிதி உதவியில் இயங்கும் மருத்துவ கல்லூரிகள்: அமைச்சர் தகவல்

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்






சுகாதாரத் துறையின் பல்வேறு திட்டங்கள்: மத்திய இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் மாநிலங்களவையில் தகவல்

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:

புதிய குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கை:

மக்கள் தொகையை நிலைபடுத்துவதற்கானக் கொள்கைத் திட்டங்களுக்கிணங்க, குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. 2005-ஆம் ஆண்டில் தேசிய சுகாதார இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இந்தத் திட்டம் கூடுதல் வலுப்பெற்றது. தேசிய சுகாதாரக் கொள்கை, 2017, மக்கள் தொகையை நிலைப்படுத்துவதற்குக் கொள்கை சார்ந்த வழிகாட்டுதல்களை அளிக்கிறது. குறிப்பிட்ட 7 மாநிலங்களின் 146 மாவட்டங்களில் கருத்தடைச் சாதனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது.

கொவிட் தொற்றுக்குப் பிந்தைய நோய்கள்:

கொவிட்-19 தொற்றின் விளைவுகள் மற்றும் மருத்துவச் சிகிச்சை குறித்தத் தகவல்களைச் சேகரிப்பதற்காக நாடு முழுவதும் 20 இடங்களில் கொவிட் மருத்துவப் பதிவு அலுவலகத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் உருவாக்கியுள்ளது. இந்தத் தகவல், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளைப் பற்றியது மட்டுமே. பெருநாடி, நுரையீரல் அழற்சி போன்ற கொவிட் தொற்றுக்குப் பிறகு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் கொவிட் தொற்றுக்குப் பிந்தைய பிரச்சனைகள்/ நிலைகள் பற்றிய வழிகாட்டுதல்கள் தொடர்பாக நிபுணர் குழுக்கள் பணியாற்றி வருகின்றன.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம்:

நிதி ஆயோக்கின் அறிவுரையின்படி, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் குறித்த மதிப்பீடு 2020-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டதில் இந்தத் திட்டம் சிறப்பாக செயல்பட்டது, அதில் தெரியவந்தது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் -IV மற்றும் அதன் நீட்டிக்கப்பட்டப் பகுதி (2012-21) ஆகியவை, திட்டத்தின் துவக்கத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை சிறப்பாக எட்டியுள்ளன. இந்தத் திட்டத்தின் நிதி முறைகேடுகள் குறித்த எந்தத் தகவலும் மதிப்பீட்டில் தெரிவிக்கப்படவில்லை. மேலும் இதுபோன்ற எந்த நிகழ்வும் அரசின் பார்வைக்குக் கொண்டு வரப்படவில்லை. கடந்த 2018-19, 2019-20 மற்றும் 2020-21 ஆகிய மூன்று நிதி ஆண்டுகளில் இந்தத் திட்டத்தின் கீழ் முறையே 93.7%, 94.9% மற்றும் 97.1% நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவப் பணியாளர்களின் சேவைக்கு அங்கீகாரம்:

கொவிட்-19 சம்பந்தமான பணிகளில் ஈடுபட்ட மருத்துவப் பணியாளர்களின் சேவைகளை அங்கீகரிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளுமாறு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி குறைந்தபட்சம் இந்தப் பணிகளில் 100 நாட்கள் ஈடுபட்டவர்கள், இந்திய அரசின் பிரதமரின் மேன்மைமிகு கொவிட் தேசியச் சேவை அங்கீகாரத்தைப் பெறுவார்கள். கொவிட் சம்பந்தமான வேலைகளில் குறைந்தபட்சம் 100 நாட்களை நிறைவு செய்வோருக்கு மருத்துவம் சார்ந்த தொழில்களின் முறையான அரசு நியமனத்தில் மாநிலங்களும், யூனியன் பிரதேச அரசுகளும் முன்னுரிமை வழங்க  வேண்டும். 2020-21-ஆம் கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் இடங்களுக்கான மத்திய தொகுப்பில் ‘கொவிட் போராளிகளின் குழந்தைகள்' என்ற புதிய பிரிவை இந்திய அரசு உருவாக்கியுள்ளது.

கொவிட்- 19 தொற்றுக்கு மாநிலங்களுக்கான சிறப்பு நிதி:

கொவிட்- 19 மேலாண்மை சம்பந்தமான அனைத்து அம்சங்களுக்கும் ஆதரவு அளிக்கவும், மருத்துவ உள்கட்டமைப்பை அதிகரிக்கவும் தேவையான நிதி உதவியை மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அளித்து வருகிறது. 2019-20 நிதி ஆண்டில் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ரூ. 1113.21 கோடி நிதி விடுவிக்கப்பட்டது. 2020-21 நிதியாண்டில் இந்திய கொவிட்-19 அவசரகால நடவடிக்கை மற்றும் சுகாதார அமைப்புமுறை தயார்நிலை தொகுப்பிற்காக ரூ. 8257.88 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் தொகுப்பின் இரண்டாவது கட்டமாக ரூ. 23,123 கோடி நிதி வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ரூ. 1827.78 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 30, 2021 வரை 4.23 கோடி என்-95 முகக் கவசங்களும், 1.77 கோடி முழு உடல் கவச உடைகளும், 48,420 செயற்கை சுவாசக் கருவிகளும், 1.03 கோடி ரெம்டெசிவர் குப்பிகளும் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள்/ மத்திய அரசின் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31, 2021 வரை 48.40 கோடி கொவிட் தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இவை தவிர, சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு மேலும் ஏராளமான முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டம்:

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தினால் மருத்துவமனைகளில் ஏற்படும் பிறப்பு விகிதம் தேசிய குடும்பச் சுகாதாரக் கணக்கெடுப்பு (என்எஃப்ஹெச்எஸ்)-3-இன் 38.7%ஐ விட அதிகமாக, என்எஃப்ஹெச்எஸ்-4 இல் 78.9% பதிவாகியுள்ளது. 22 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட என்எஃப்ஹெச்எஸ்-5-இன் முதல்கட்ட கணக்கெடுப்பின்படி 14 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் 90%கும் அதிகமான பிறப்புகள் மருத்துவமனைகளில் நிகழ்ந்துள்ளன.

மத்திய அரசின் நிதி உதவியில் இயங்கும் மருத்துவ கல்லூரிகள்:

மத்திய அரசின் நிதி உதவியுடன் கூடிய “தற்போது இயங்கும் மாவட்ட/ பரிந்துரைக்கப்பட்ட மருத்துவமனைகளுடன் தொடர்புடைய புதிய மருத்துவ கல்லூரிகளை உருவாக்குதல்” திட்டத்தை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் செயல்படுத்துகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மூன்று கட்டங்களில் 157 புதிய மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 47 கல்லூரிகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. மேலும் 36 மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதிக்காக விண்ணப்பித்துள்ளன. இந்தத் திட்டத்தை அமல்படுத்தும் முகமையாக செயல்படும் மாநில அரசுகள், திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் திட்டங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவரும் பணிகளை மேற்கொள்கின்றன.

சுகாதார அமைச்சரின் விருப்ப மானியம்:

ராஷ்டிரிய ஆரோக்கிய நிதி திட்டத்தின் கீழ் ஏழை நோயாளிகள், இலவச மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்படாத உயிர்க்கொல்லி நோய்களுக்கு அரசு மருத்துவமனைகளில் அனுமதி, சிகிச்சை பெறுவதற்கு அதிகபட்சமாக ரூ. 1.25 லட்சம் நிதி உதவியைப் பெறுவதற்கு சுகாதார அமைச்சரின் விருப்ப மானியம் வழங்கப்படுகிறது. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 1.25 லட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தால் பயனடைவார்கள். கடந்த 2018-19, 2019-20 மற்றும் 2020-21 ஆகிய ஆண்டுகளில் தமிழகத்தில் முறையே 78,19 மற்றும் 5 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இளையாத்தங்குடியில் கோலப் புரட்சி, மீனா ஆச்சி -லீலா மாமி குழு தந்த வண்ண மாட்சி!

 * இளையாத்தங்குடியில் * *மீனா ஆச்சி - லீலா மாமி குழு செய்த கோலப் புரட்சி! இளையாத்தங்குடி கைலாஷநாதர் - நித்யகல்யாணி அம்மன் ஆலயத்தில் அதிசயம்! பகுதி 1: பிரத்யேகம் - தற்போது பிரபலமான நிகழ்வாக நடைபெறும் கோலச் சேவை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் திருநகருக்கு அருகில் அமைந்துள்ள இளையாத்தங்குடி அருள்மிகு கைலாசநாதர் நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில் தற்போது பக்தர்கள் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் பிரபலமான நிகழ்வாக நகரத்தார் பெண்கள் குழுவினரின் கோலச் சேவை நடைபெற்று வருகிறது. இவர்கள் திருப்பணி ஏற்கனவே நாம் பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் கண்டு பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் வெளியிட்ட நிலையில், தற்போது இளையாத்தங்குடி கைலாசநாதர் நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில் இது பிரபலமான நிகழ்வாக நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாற்பது பெண்கள் அடங்கிய குழுவினர் செம்மை, பசுமை, மஞ்சள், நீலம், ஊதா என பல்வேறு வண்ணப் பொடிகளைக் கொண்டு, நுண்ணிய புள்ளிகள் வைத்து, சிக்குக் கோலங்கள், பூக்கோலங்கள், தாமரைக் கோலங்கள், கிளிக் கோலங்கள் இட்டு, கருங்கல் தரையை வண்ண ஓவியமாக மாற்றி வருகின்றனர். தலைம...

எட்டு லட்சம் மரங்களை நட்டவர், எண்ணற்ற மனிதர்களை வளர்க்கிறார்!

 --- *புண்ணியவாசலில் புண்ணியம் செய்யும் வாசல் - அன்பாலயம்!* *பப்ளிக் ஜஸ்டிஸ் ஆசிரியர் கவிஞர் சீ.க. புலித்தேவன் பாண்டியன் பிறந்தநாள் - பசுமை நாயகன் மரம் ராஜா பங்கேற்ற நெகிழ்ச்சி விழா!* *புதுக்கோட்டை, ஆவுடையார்கோவில் புண்ணியவாசல்:* தமிழ்நாட்டில் ஆயிரம் முதியோர் இல்லங்கள் உண்டு. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் அருகே புண்ணியவாசலில் இயங்கும் *"மரம் அறக்கட்டளையின் அன்பாலயம் - ஆதரவற்ற முதியோர் இல்லம் (Regd No: 26/2019)"* போல ஒரு இல்லத்தை எங்கும் காண முடியாது! * காரணம் என்ன தெரியுமா? * > இங்கே சுத்தம் உண்டு, சுகாதாரம் உண்டு, > அதையும் தாண்டி அன்பு உண்டு, கருணை உண்டு, > கண்ணீரைத் துடைக்கும் பாசம் உண்டு! *இதன் ஆணிவேர் யார் தெரியுமா?* நாம் பார்த்த புகைப்படங்களின் பின்னணியில் இருக்கும் உண்மையான ஹீரோ *திரு. S.R.M. ராஜா - அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் "மரம் ராஜா"* தான்! - புதுக்கோட்டை மண்ணில் மட்டும் *8 லட்சம் மரங்களை* நட்டு, தண்ணீர் ஊற்றி தன் பிள்ளைகள் போல வளர்த்த பசுமை நாயகன்! - அந்த பசுமை நாயகன் தான் *"மரம் அறக்கட்டளை"* நிறுவனர்! - மரம் வளர்த...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...