மளிகைக் கடையில் பத்து ரூபாய்க்கு விற்பனை செய்த Togito Cola என்ற ஒரு குளிர்பானத்தை வாங்கிக் குடித்த சிறுமி மரணம் குளிர்பான ஆலைக்கு சீல்
சென்னை பெசண்ட் நகரில் ஓடைகுப்பத்தைச் சேர்ந்த காயத்ரி கல்பாக்கம் சதீஷைத் திருமணம் செய்து கல்பாக்கத்தில் வசிக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக காயத்ரியின் இரண்டு மகள்களான தரணி (வயது 13)
மற்றும் அஷ்வினி(வயது 16) ஆகியோருடன் பெசன்ட் நகர் ஓடை குப்பம் அவரது தாயார் வீட்டுக்கு வந்து பெசன்ட்நகரிலுள்ள வேளாங்கண்ணி சர்ச்சில் பிரார்த்தனையில் வரும் நபர்களுக்கு மொட்டை போடுதல் செய்கிற நிலையில், சிறுமி தரணி வீட்டின் அருகிலிருந்த மளிகைக் கடையில் பத்து ரூபாய்க்கு விற்பனை செய்த Togito Cola என்ற ஒரு
குளிர்பானத்தை வாங்கிக் குடித்த சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் வசிக்கும் நபர்கள் சிறுமியை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற வழியிலேயே சிறுமி இறந்து போனதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் உடலும் நீல நிறத்தில் மாறியதாகக் கூறப்படுகிறது.சிறுமியின் இறப்புக்கு அவர் அருந்திய குளிர்பானம் காரணமாக இருக்கலாமென்ற சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து, குறிப்பிட்ட கடையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சிறுமி குடித்த குளிர்பானம் 17 பாட்டில்கள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில்,
மீதமுள்ளவற்றின் விற்பனையைத் தடுத்து அவற்றை கைப்பற்றி சோதனைக் அனுப்பிய பின்னர் சிறுமி உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகில் ஆத்தூர் கிராமத்தில் உள்ள அக்க்ஷயா ஃபுட் ப்ராடக்ட்ஸ் குளிர்பான கம்பெனியில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஜெகதீஸ் சந்திரபோஸ் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு குளிர்பானங்கள்
தயாரிக்கும் ஆலையை மூடி சீல் வைத்தனர். பரிசோதனை மாதிரிகளின் முடிவு வரும் வரை குளிர்பான ஆலையை மூடி வைக்க உத்தரவிட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது.





கருத்துகள்