உத்தரப்பிரதேசத்தின் தேர்தல் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக எதிர் கொள்ளத் தயாராகும் பிரியங்கா

உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. 2022 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.  2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாஜக 300 க்கும் மேற்பட்ட இடங்களைகா கைபற்றியது. காரணம் பிளவுபட்ட  சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் தோல்வி அடைந்தது.


ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்த உத்தரப்பிரதேசத்தை மீண்டும் கைபற்றும் நோக்கில் அக்கட்சியின் தலைமை தீவிரமாகக் களப்பணியாற்றுகிறது. இதற்காக அம்மாநிலத்தின் பொறுப்பாளராக பிரியங்கா காந்தியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸ் மேலிடம் நியமித்து விட்டது. அவரும் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்.தேர்தலையொட்டி பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அதிகாரப்பூர்வமாக தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளன. மாநிலம் முழுவதும் மாரத்தான் சுற்றுப்பயணத்திற்கு பிரியங்கா காந்தி திட்டமிட்டுள்ளார். அதே சமயம், உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசியல் கட்சிகளின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த பேச்சுகளும் எழுந்து வருகின்றன. உத்தரப்பிரதேசத்தின்


பிரயாக்ராஜ் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சல்மான் குர்ஷித், “ காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் தேர்தலை கட்சி எதிர்கொள்ளும். ஆனால், காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக களமிறங்குவது குறித்து அவர்தான் முடிவு செய்வார்” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, கள நிலவரங்களை எடுத்துக்கூறி பிரியங்கா காந்தியிடம் இதுபற்றி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டசபைத் தேர்தலைச் சுற்றியே தேசியக் கட்சிகளின் செயல்பாடுகளும் இருக்கின்றன. முன்னால் முதல்வர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதிக்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ், பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பெரும் சவாலாக உள்ளன. பாஜக-வில் தொடர்ந்து அமித்ஷா பல குழுக்களை அனுப்பியும், உ.பி பாஜக நிர்வாகிகளை அழைத்து பேசியும் பல்வேறு புதுப்புது வியூகங்கள் வகுத்து வருகிறார். இதுவரை பாஜக-வில் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பது பற்றி உறுதியான செய்திகள் இல்லை.


இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் தீவிர ஆலோசனைகள் நடந்துவருகின்றன. பிரியங்கா காந்தி அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்ட்டால் பாஜக சார்பில் தற்போது அமேதியில் வெற்றி பெற்று மத்திய அமைச்சரவையில் உள்ள ஸ்மிருதி இராணி களமிறக்கும் நிலை வருமா எனவும் அரசியல் களத்தில் விவாதிக்கப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா