முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனுக்கள் குவிய லஞ்சம் ஊழல் முறைகேடுகள் தான் காரணம் என்பதை தலைமைச் செயலாளர் நன்கு அறிவார் அதுவே அவரது கடிதம்

தமிழ் நாட்டில் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனுக்கள் குவிகிறது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் பெற்ற மனுக்கள் ஆட்சி அமைந்த நேரம் என்பதால் சிறப்பு கவனம் செலுத்தி உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது. அனைத்து நேரங்களிலும் உடனுக்குடன் தீர்வு காண்பது


சாத்தியமில்லை தான். மனுக்கள் ஏன் வந்து இங்கு குவிகின்றன என்பதை மாவட்ட ஆட்சியர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உரிய காலத்தில் தீர்வு காணாததால்  கோப்புகள் தேக்கமாவதால் ஊழல் மலிந்த நிலையில் குக்கிராமங்களிலிருந்து கோட்டை நோக்கிப் புறப்பட்டு வருகிறார்கள்" என்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு  இ ஆ ப மிகுந்த வேதனை  தெரிவித்துள்ளார். முதல்வர் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்ட நிலையில்.

திட்டத்தில் பெறப்பட்டு மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும்  வருகிறது. cmcell.tn.gov.in என்ற இணையதளத்தில் `உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறைக்கு மாவட்ட வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால் சில மனுக்கள் யாருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அறியாமல்  சம்பந்தப்பட்ட மனு அனுப்பி வைத்தவர் கூறிய புகார்கள் சரியாக படித்து பார்க்காமல் குறை எங்குள்ளது என்று களைவதை விடுத்து அனுப்பி வைத்த நபர் முகவரி உள்ள இடத்திற்கே அடித்த பந்து போல் திருப்பி வந்த நிகழ்வுகள் உண்டு.  அனுப்பி அதில் உள்ள அந்த அதிகாரிகளுடைய தொடர்பு எண்கள்
கொடுக்கப்பட்டிருக்கின்றன. உங்கள் மாவட்டத்தில் `உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தைச் செயல்படுத்தும் அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை காரணமாக பல கூறலாம் மொத்தமாக  ஊழல் மலிந்து கிடக்கின்றன. பட்டியலை அறிந்துகொள்ள விரும்பினால் அதை க்ளிக் செய்து அறிந்துகொள்ளலாம்    இந்நிலையில்

தலைமை செயலாளரின் வேண்டுகோள்!

     


மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இ ஆ ப கடிதம் எழுதியுள்ளார்.மக்கள் தங்களுடைய கோரிக்கைகளை நேரடியாக முதல்வருக்கே தெரிவிக்கும் வகையில் முதல்வர் தனிப்பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் ஆன்லைன் மற்றும் நேரடி என இரண்டு முறைகளிலும் புகார் அளிக்கலாம். இருந்தாலும் பெரும்பாலான மக்கள் நேரிடையாகவே வந்து புகார் மனு அளித்தால்,விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எண்ணத்தில் நேரில் வந்து மனு அளிக்கின்றனர். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி கடிதம் எழுதியதில், “மக்களுடைய பிரச்சினைகளை மாவட்ட அளவிலேயே தீர்த்து வைக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட அளவில் பிரச்சினைகளைத் தீர்க்காத காரணத்தினால் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு நாள் தோறும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் குவிகின்றன.மாவட்டம், வட்டம், சிற்றூர் அளவிலேயே தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள், உரிய காலத்தில் தீர்க்கப்படாமலிருப்பதால் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு அவர்கள் குக்கிராமங்களில் இருந்து கோட்டையை நோக்கி புறப்பட்டு விடுகிறார்கள். கனவுகள் நிறைந்த கண்களோடும், கவலைகள் நிறைந்த இதயத்தோடும், அவர்கள் காத்திருப்பதை பார்க்கும்போது மனம் கனக்கிறது. எனவே விரிவான ஆய்வின் மூலம் மாவட்ட அளவிலான பிரச்சினைகளை மாவட்ட அளவிலே தீர்த்துவைக்க மாவட்ட ஆட்சியர்கள் முனைய வேண்டும்.


முனைப்பாகவும், பணிவோடும் செயல்பட்டால் அவர்கள் தலைமை செயலகத்தின் கதவுகளை தட்ட வேண்டிய தேவை எழாது. இலக்குகளை அடைவது மட்டுமல்ல, மக்கள் இதயங்களை குளிர்விப்பதும் அரசுப்பணியின் ஓர் அம்சமே.

அதிக மனுக்களைத் தீர்த்துவைக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கு கேடயம் வழங்குவதை விட குறைவான மனுக்கள் எந்த மாவட்டத்திலிருந்து வருகிறதோ அவர்களுக்கு கேடயம் அளிக்கும் நடைமுறையை கொண்டு வரும் அளவுக்கு உங்கள் பணி இருக்க வேண்டும்” என்று  தெரிவித்துள்ளார்.    அவர் பணியில் நேர்மையான, அதிகாரி என்பதால் இந்த நிலை.   சாதாரணமாக பிறப்பு, இறப்பு, வாரிசு, ஜாதி, வருவாய் சான்றிதழ் கூட ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டாலும் விண்ணப்பம் செய்தவர்களை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அழைத்து கையூட்டு பெறாமல் வழங்குவதில்லை என்பது தான் உண்மை நிலை                                              தமிழகத்தின் முதல்வர், மற்றும் தலைமைச் செயலாளர் எண்ணத்தையும், உத்தரவையும் அனுசரிக்காத முதல்வரின் தனிப்பிரிவு (CM Cell) அலுவலர்கள். மனுவை படித்த பின்னர் ஆராய்வதில்லை

தமிழ்நாட்டில் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அனுப்பப்படும் மனுக்களை முழுமையாக படித்துப் பார்க்காமலேயே இன்னும் பழைய முறைப்படியே எதுவாக இருந்தாலும் அதாவது காவல்துறை சாராத மனுக்கள் என்றாலும் உள்ளூர் காவல் நிலையத்துக்குத்தான் அனுப்புகிறார்கள்..


இதேயே ஒரு நபர் மனுவாகப் பதிவு செய்த பின்பும் பலனில்லை.

காலம் மாறினாலும் ஆட்சி மாறினாலும் ஒரு சில காட்சிகள் மாறவில்லை முதலில் நல்ல தெளிவாக மனுவைப் கையாளும் பயிற்சி தேவை

-*ஒரு அரசு ஊழியர் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி இலஞ்சம் வாங்கினால் அவர்மீது தனிநபர் புகார் மனு தாக்கல் செய்ய கு. வி. மு. ச பிரிவு 197 ன் கீழ் 

அரசிடமிருந்து முன் அனுமதி பெற்றுத்தான் ஒரு அரசு ஊழியர் மீது மோசடி வழக்கை நீதிமன்றத்தில் தனிநபர் புகாராக தாக்கல் செய்ய முடியுமா? என்பது குறித்து உச்சநீதிமன்றம் "இராஜேஸ்குமார் மிஸ்ரா Vs பீகார் மாநில அரசு என்ற வழக்கில் தெளிவாக விவாதித்துள்ளது.

அதேபோல் சென்னை உயர்நீதிமன்றம்" பிரகாஷ் பாதல் பஞ்சாப் மாநில அரசு (என்ற வழக்கில் மேற்படி உச்சநீதிமன்ற வழக்கையும் சுட்டிக்காட்டி தீர்ப்பு பத்தி 49 ல் கீழ்க்கண்டவாறு தீர்ப்பு கூறியுள்ளது.

" இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 420 மற்றும் 467,468,471 மற்றும் 120 (B) ஆகிய குற்றங்களை ஒரு பொது ஊழியரான அரசு ஊழியர் தன்னுடைய அரசு கடமையை செய்யும் பொழுது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி செய்ய முடியும். இது போன்ற குற்றங்களுக்கு அரசிடமிருந்து கு. வி. மு. ச பிரிவு 197 ன் கீழ் முன் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை "

மேற்கண்ட தீர்ப்பின்படி ஒரு பொது ஊழியர் லஞ்சம் வாங்கியதாகக் கூறி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் தனிநபர் புகார்களுக்கு அரசிடமிருந்து முன் அனுமதி பெறத் தேவையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. இருப்பினும் மக்கள் இன்னும் விழிப்புணர்வு பெற வில்லை அல்லது நமக்கு இது தேவையா என்கிற என்னத்தின் காரணமாகவோ அல்லது பாவ புண்ணியம் கருதியோ அல்லது நம் வேளை முடிந்தால் போதுமே என்கிற நிலையில் தான் இது போன்ற சூழ்நிலையில் ஊழியர்களின் ஊழல் நடக்கிறது.ஒரே பத்து சதவீதம் உள்ள பொதுவான சிறந்த சிந்தனையாளர் முயன்றால் நிலை மாறும்.. மொத்தத்தில்  பொது ஊழியர்களில் நேர்மையான பத்து சதவீதம் இருந்து  மனச்சாட்சிப்படி நடந்தால் இதுபோன்ற புகார்கள் தலைமைச் செயலகம் வரை சொல்லாமல் தடுக்கலாம். நல்ல நேர்மறையான உயர் அதிகாரிகள் இருக்கும் போதே இந்த நிலை என்றால் கடந்த ஆட்சியில் மக்கள் என்ன பாடு பட்டிருப்பார்கள் என்பதை நாம் அறிவோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா