சிறுமி பாலியல் வழக்கில் காரைக்குடியில் பியூட்டி பார்லர் நடத்திய பெண் மற்றும் அவரது மகள் உடன் ஒருவர் கைது

சிறுமி பாலியல் வழக்கில் காரைக்குடியில் பியூட்டி பார்லர் நடத்திய பெண் மற்றும் அவரது மகள் உடன் ஒருவர் கைது


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தனியார் பள்ளியின் மாணவி, தன் வகுப்புத் தோழி மூலம் அறிமுகமான, காரைக்குடி வருமான வரி அலுவலகம் அருகே உள்ள அழகு நிலையத்திற்கு தன் தோழியுடன் கண் புருவம் திருத்துவதற்காக சென்றபோது அங்கிருந்த  பொறுப்பாளருடன்  பழக்கம் ஏற்பட சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் அத்துமீறல் செய்துள்ளதாக தெரியவருகிறது.

 பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் சேர்ந்த மன்சில்,


தேவகோட்டையில் வசிக்கும் மணிமாறன் மகன் விக்னேஷ்,(வயது 28) காரைக்குடியில் வசிக்கும் பொன்வேல் மனைவி லட்சுமி(வயது 40) உள்ளிட்ட மற்றொரு நபர் மீது காரைக்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில்.

 விசாரணைக்குப் பின் குற்றம் குற்றம்சாட்டப்பட்ட லட்சுமி; விக்னேஷ் ; உள்ளிட்ட மூவரையும் காரைக்குடி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் மகேஸ்வரி கைது செய்து விசாரணை நடத்துகிறார்.


தலைமறைவான டார்ஜிலிங்  மன்சில் என்ற நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறும் போது,

 "யாரேனும் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டால், அல்லது அதற்கு உடந்தையாக இருந்தால், அவர்கள் மீது "போக்சோ" சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன்

நீதிமன்றத்தில் , உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என எச்சரித்தார்.

 மேலும் யாரேனும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமி பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டால், எவ்வித தயக்கமும் இன்றி, உடனடியாக அருகிலுள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும்" கேட்டுக்கொண்டார்.

 பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் செல்போன் தொடர்புகளைக் கண்காணிக்குமாறு மாணவ-மாணவியர்கள் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், முகநூல் , போன்ற சமூக வலைதளங்களில் வரும் போலியான புகைப்படங்களையோ, மற்றும் ஆசை வார்த்தைகளையோ, நம்பி ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.


 ஏதேனும் பாலியல் அத்துமீறல் செய்கையை தொலைபேசியிலோ, நேரிலோ, வீடியோ அழைப்பிலோ, தொந்தரவு செய்தால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு, அல்லது அவசர அழைப்பு எண் 100 ,அல்லது குழந்தைகள் நல உதவி அழைப்பு எண 1098 , என்ற எண்ணிற்கு தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் .

மேலும் பாதிப்புக்கு உள்ளாகும் சிறுமிகள் மற்றும் குடும்பத்தினரின் மனநிலையை காயப்படுத்தும் விதமாக, அவர்களின் மன உறுதியை சிதைககும் அளவிற்கு, இழிவுபடுத்தும் விதமாக, மிகைப்படுத்தப்பட்ட, நடக்காத நிகழ்வுகளை, உண்மைக்குப் புறம்பான செய்திகளை, சமூக வலைதளங்களிலும், அல்லது குறுஞ்செய்திகளும், வதந்தியை பரப்புபவர்கள் மீது, உரிய கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிவகங்கை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்  தெரிவித்துள்ளார்.


 காரைக்குடியில் அழகு நிலையம் நடத்தி ,பள்ளிப் பிள்ளைகளை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கிய அழகு படுத்தல் நிலையத்தின் உரிமையாளர் லட்சுமியை காவல்துறையினர் கைது செய்திருப்பது டன் இதில் சம்பந்தப்பட்ட நபர் பெயர் இன்னும் வெளிவரவில்லை.அழகு படுத்தல் நிலைய பொறுப்பாளர் லட்சுமி, அவரது 17 வயது மகள், அங்கு பணியாற்றிய விக்னேஸ்வரன் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த நிலையில் இதில்

, முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் தப்பியோடிய மான்சில் எனும் வட மாநில நபரைத் தேடி வருவதால் அவரது ஊரான மேற்கு வங்காளத்திற்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கின்றனர். அவரை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். அவர் சிக்கினால்தான் இந்த பாலியல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளி யார்? எவ்வளவு நாட்களாக இதுபோன்று மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு நடைபெற்றுள்ளது என்பது தெரியும்.

இதற்கிடையே பாலியல் தொந்தரவுக்கு ஆளான மாணவிகள் படித்த பள்ளி நிர்வாகத்திற்கு இதுபற்றி முன்பே தகவல் கிடைத்துள்ளதாகவும், அவர்கள் காவல்துறைக்குத் தெரிவிக்காமல் இருந்து மாணவிகள் மற்றும் அவர்களை சரியாகக் கண்காணிக்கத் தவறியதாக ஆசிரியைகளிடமும் விசாரணை நடத்தியதாக தகவல் கூறப்படுகிறது. மேலும் பள்ளி நிர்வாகம் ஒரு ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்ததோடு, இரண்டு மாணவிகளுக்கு மாற்றுச்சான்றிதழ் கொடுத்து நடவடிக்கை மேற்கொண்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில்

இந்தச் சம்பவத்தில் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? என்பது மர்மமாக உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா