கடலூருக்கும் மாமல்லபுரத்திற்கும் அருகில் கரையை கடக்கும் புயல்

சென்னை, சேர்ந்த 8 மாவட்டங்களில் சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் .


நவம்பர்.,11 சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.தென் வங்காள விரிகுடா கடலின் மத்தியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தமிழக கடற்கரை பகுதியை மாமல்லபுரம் அருகே இன்று காலை  11 மணிக்கு மேல் நெருங்குவதைத் தொடர்ந்து மேற்கு மற்றும் வட மேற்குத் திசையில் நகர்ந்து தென் ஆந்திரப் பிரதேசம், வட தமிழ்நாடு, புதுச்சேரி யூனியன் பிரதேசக் கடற்கரையில் காரைக்காலுக்கும் - ஸ்ரீஹரிக்கோட்டாவிற்குமிடையில்

கடலூருக்கும் மாமல்லபுரத்திற்குமருகில் நாளை மாலை கரையைக் கடக்கும்.

வடக்குக் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் யூனியன் பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 30 கி.மீ., வேகத்தில் 11 ஆம் தேதி காலை முதல் வீசும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் சில இடங்களல் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கனமழையும், மற்றும் ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் உண்டு.


காவிரி கடலோரப் பகுதிகளான டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  மிக கனமழையும் பொழியும்.


கோயமுத்தூர், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிகப் பலமான மழையும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும்


சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிக கனமழையும், காஞ்சிபுரம், விழுப்புரம், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்  சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, புதுச்சேரி, கோயமுத்தூர், நீலகிரி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன மழையும் பிற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்


சென்னையில்  அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் சில பகுதிகளில் அதி கனமழையும் பெய்யக்கூடும். அடுத்த 48 மணிநேரத்திற்கு நகரின் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யலாம் கடந்த 24 மணி நேரத்தில், 5 இடங்களில் அதி கனமழையும், 21 இடங்களில் மிக கனமழையும், 40 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.


நாகப்பட்டினம், திருப்பூண்டி( நாகப்பட்டினம்) தலா 31 செ.மீ., காரைக்காலில் 29 செ.மீ., வேதாரண்யம்(நாகப்பட்டினம்) 25 செ.மீ., தலைஞயிறு (நாகப்பட்டினம்)-24 செ.மீ., திருத்துறைப்பூண்டி( திருவாரூர்) 22 செ.மீ., பேராவூரணி (தஞ்சாவூர்) - 20 செ.மீ., மழை அளவு பதிவாகியுள்ளது.


நவம்பர் மாதம் 11 ஆம் தேதி தென் மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் தமிழக கடலோர பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்திலும் இடை இடையே 65 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள், கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கப்படுகிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா