சென்னை தியாகராயநகர் அஞ்சல் துறையில் குறை தீர்ப்பு முகாம்

அஞ்சல் குறை தீர்ப்பு முகாம் 


சென்னை தியாகராயநகரில் உள்ள அஞ்சல் துறை சென்னை மத்திய கோட்ட அலுவலகத்தில் 21.12.2021 அன்று மாலை 4.00 மணிக்கு குறை தீர்ப்பு முகாம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அஞ்சல்சேவைகள் (மணியார்டர்கள், பதிவுத் தபால்கள், சேமிப்பு பத்திரங்கள், காப்பீடு செய்யப்பட்ட தபால்கள் உள்ளிட்டவை) குறித்த குறைகளை, முதுநிலை கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம், சென்னை- 600 017 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ அல்லது  dochennaicitycentral.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ் அப் (94447 54906) மூலமாகவோ தெரிவிக்கலாம். அவர்கள் 21-ந் தேதி நேரிலும் முகாமில் கலந்து கொள்ளலாம் என்று தியாகராயநகர், சென்னை மத்திய அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் திரு. மு. ஸ்ரீராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்