பிளாஸ்டிக் கழிவுகளின் மறு பயன்பாட்டுக்கு தேசிய மாணவர் படையும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும் புரிந்துணர்வு ஒப்பந்தம்

பிளாஸ்டிக் கழிவுகளின் மறு பயன்பாட்டுக்கு தேசிய மாணவர் படையும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன


தேசிய மாணவர் படையினரால் ( என் சி சி )  கடற்கரை தூய்மைத் திட்டம் மற்றும் பிற தூய்மைப் பணிகள் மூலம் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி  நாடு முழுவதும் சாலைகள் அமைப்பதற்காக தேசிய மாணவர் படையும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன

2021 டிசம்பர் 17 அன்று என் சி சி தலைமை இயக்குனர் லேப்டினன்ட் ஜெனரல் குர்பீர்பால் சிங்,  இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் முதன்மைப்  பொது மேலாளர் திரு.சுசில் குமார் மிஸ்ரா இடையே  கையெழுத்தானது.

தங்களால் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யவும் லாபகரமாக பயன்படுத்தவும் ஐ ஐ டி கள் , என் ஐ ஐ டி களை தேசிய மாணவர்படை அணுகியுள்ளது.  கரக்பூர் ஐ ஐ டி இதற்கு தங்களின் தொழில்நுட்ப ஆலோசனையை வழங்க ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது. இதைத் தவிர தொண்டு நிறுவனங்களையும் என் சி சி அணுகியுள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாட்டின் கேடுகள் மற்றும் இவற்றால் இயற்கை வளங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி மக்களிடையே இவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

கடந்த ஒரு மாதத்தில்  3.4 லட்சம் என் சி சி மாணவர்கள் 127 இடங்களில் கடற்கரையை தூய்மைப் படுத்தும் திட்டத்தில் பங்கேற்று 6 டன் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்துள்ளனர். சுமார் 17 லட்சம் மக்களிடம் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்துள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்