விரைவு சக்தி குறித்த பயிலரங்கம்: பாரதீப் துறைமுக கழகம் நடத்தியது

 விரைவு சக்தி குறித்த பயிலரங்கம்: பாரதீப் துறைமுக கழகம் நடத்தியது


‘விரைவு சக்தி - ஒருங்கிணைந்த மற்றும் தடையற்ற விநியோக சங்கிலி’’ என்ற கருப்பொருளில் பயிலரங்கம் ஒன்றை பாரதீப் துறைமுக கழகம், புவனேஸ்வரில் இன்று நடத்தியது.

இதன் தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர். சஞ்சீவ் ரஞ்சன், திறன் மற்றும் கட்டணம் தொடர்பான விஷயத்தில் பாரதீப் துறைமுக கழகத்துக்கு  உலகத் தரத்தை எட்டும் சாத்தியம் உள்ளது என்றார்.  விரைவு சக்தி திட்டத்தின் கீழ் பாரதீப் பகுதியிலிருந்து சாந்திக்கோல்  வரை உள்ள தேசிய நெடுங்சாலை என்எச்-53-ஐ அகலப்படுத்த வேண்டும் என அவர் கூறினார்.  பாரதீபிலிருந்து, கட்டாக் வரையிலான மாநில நெடுஞ்சாலை 12-ஐயும் முன்னுரிமை அடிப்படையில் நான்கு வழிச்சாலையாக மாற்றலாம் என டாக்டர். சஞ்சீவ் ரஞ்சன் கூறினார்.  சரக்கு போக்குவரத்தில் நீர்வழிப் போக்குவரத்தும் முக்கிய பங்காற்ற முடியும் எனவும், இந்த நோக்கில் பாரதீப் துறைமுக கழகம் தெரிவித்துள்ள ஆற்றங்கரை துறைமுகம் சரியான நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்தார். சலேகான் முதல் பாரதீப் வரை ப்ரத்யேக ரயில் வழித்தடம் அமைக்கவும் அவர் ஆலோசனை தெரிவித்தார். விரைவு சக்தி திட்டத்தின் கீழ் முறையான போக்குவரத்து கட்டமைப்பு மூலம், தற்போதைய சரக்கு போக்குவரத்து செலவான 30 சதவீதத்திலிருந்து, உலகளவில் உள்ள 7-8 சதவீதம் வரை குறைக்கும் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

 திறனை அதிகரிக்கும் திட்டங்கள் மற்றும், பல்வேறு போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைப்பது குறித்தும்  பாரதீப் துறைமுக கழகத்தின் தலைவர் திரு பி.எல் ஹரநாத் விளக்கினார்.

துவக்க நிகழ்ச்சிக்கு முன், இரு தொழில்நுட்ப அமர்வுகளும் நடந்தன. ‘நிலக்கரியை கடலோர பகுதி மூலம் கொண்டு செல்வதற்கான வாய்ப்புக்கள் மற்றும் சவால்கள் குறித்த அமர்வை பாரதீப் துறைமுக கழகத்தின் துணைத் தலைவர் திரு.ஏ.கே.போஸ் நடத்தினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்