தற்கொலை முயற்சி நடிகை விஜயலட்சுமியின்.. பரபரப்பான வாக்குமூலம் மோசடி நடமாடும் 'நகைக்கடை' ஹரி நாடார் மற்றொரு வழக்கில் கைதாவாரா


தற்கொலை முயற்சி நடிகை விஜயலட்சுமியின்..


பரபரப்பான வாக்குமூலம்.. மோசடி செய்து உடலில் நடமாடும் 'நகைக்கடை'  போல வலம் வந்த ஹரி நாடாருக்கு ஸ்கெட்ச் !.....?

சீட்டிங் செய்து பணமோசடி நடத்தி பெங்களூர் சிறைச்சாலையில் உள்ள பனங்காட்டு படை கட்சி எனும் ஒரு லெட்டர் பேடு அமைப்பு நடத்தி வந்த அதன் ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் ஹரி நாடாரைக் கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்த திருவான்மியூர் காவல்துறையினர் தீவிரம் காட்டி வருவதாகப் பேசப்படுகிறது.


தோள்களிலும் புரளும் நீண்ட கூந்தல் தலைமுடி, கழுத்து மற்றும் கைகளில் எல்லாம் பல கிலோ கணக்கில் தொங்கும் தங்க நகைகள், மற்றும் பயன்படுத்தும் காஸ்ட்லி கார். பந்தா (அகந்தை) லுக்.. இதுதான் ஹரி நாடார் என்ற முறையான கல்வியறிவு இல்லாத அவரது  தோற்றம்!


நாங்குநேரி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில், பனங்காட்டுப் படை கட்சி சார்பில் போட்டியிட்டு மோசடி செய்த பணத்தை வாரி இறைத்து அதிமுகவுக்கு, திமுகவுக்கு அடுத்த இடத்தை பிடிக்க யாரோ ஒரு முக்கியமான நபர் வழிகாட்ட எல்லாரையும் திரும்பி பார்க்க வைத்தவர். தான் இந்த மோசடி நபரான ஹரி என்ற ஹரி நாடார் அதிமுக பல சிக்கல் சந்திக்க காரணமாக  முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா உயிருடன் உள்ள போதே அவரால் பதவி பெற்ற முன்னாள் எம்பியான  சசிகலா புஷ்பாவுடன் இணைந்து  எந்நேரமும் அப்போது வலம் வந்து கொண்டிருந்ததவரே அவர்.!
பனங்காட்டுப்படை கட்சி சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு 36 ஆயிரம் வாக்குகளை அவர் சார்ந்த சமுதாய மக்கள் காவலர் என காட்டியதால் வந்த வாக்கு வங்கி இவர் சுயரூபம் வெளியாகாத காலம் ஆகவே  பெற்றிருந்தார்.ஆனால், ஒரு மோசடி வழக்கில் சிக்கி பெங்களூரு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இப்போது பரப்பன அக்ரஹார சிறைச்சாலையில் உள்ளார் இந்நிலையில், இவரை பற்றின ஒரு செய்தி கடந்த இரு நாட்களாகவே பரபரப்பாக சுற்றுகிறது

நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தன்னைக் காதலித்து ஏமாற்றி விட்டார் என்று, அவர் மீது பல்வேறான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து கூறிவருபவர் நடிகை விஜயலட்சுமி.  2020 ஆம் ஆண்டு அந்தக் கட்சி தலைவருக்கு ஆதரவாக,அதே சமூகம் சார்ந்த நபர் இருவரும் என்பதால் நடிகை விஜயலட்சுமியை ஹரிநாடார் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது செல்போன் மூலமாகவும், சோஷியல் மீடியாவிலும் அவதூறான கருத்துக்களை வெளியிட்டு விஜயலட்சுமிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
நடிகை விஜயலட்சுமி அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று, சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது நடிகை விஜயலட்சுமியிடம், எழும்பூர் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றார். பின்னர் உடல் நலம் சரியாகாத நிலையில் தன்னை மருத்துவமனையிலிருந்து திடீரென வெளியேற்றி விட்டதாகவும், சீமானுக்காக ஹரிநாடார் தன்னை மிரட்டுவதாகவும், சீமான், ஹரி நாடார் ஆகிய இருவரையும் கைது செய்ய வேண்டும் எனவும் அப்போது விஜயலட்சுமி வலியுறுத்தினார்.

அத்துடன், திருவான்மியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் அந்தப் புகாரின்பேரில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.. இந்த வழக்குதான் தற்போது தூசி தட்டி எடுக்கப்படுகிறதெனத் தெரிகிறது விஜயலட்சுமி உயிர் பிழைத்துக் கொண்டதால், அந்த வழக்கை மேற்கொண்டு  அப்போது விசாரிக்காமல் அந்த புகார் கிடப்பில் போட்டதாககா கூறப்பட்ட நிலையில், நடிகை விஜயலட்சுமியை மிரட்டிய வழக்கில் ஹரி நாடாரைக் கைது செய்து சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்த காவல் துறையினர் முனைப்பு காட்டி வருகிறார்களாம்‌

இதற்காக, டிரான்சிட் வாரண்ட் வழங்க வேண்டும் என்று சென்னை திருவான்மியூர் காவல்துறை சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாம்.வேறு ஒரு வழக்கில், ஹரிநாடார் சிறையில் இருப்பதால், பெங்களூர்  நீதிமன்றம் அனுமதி அளித்தவுடன் ஓரிரு நாட்களில் ஹரிநாடாரை நீதிமன்றத்தில்  திருவான்மியூர் காவல்துறை ஆஜர்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இப்போது பெங்களூர் சிறையில் சகல வசதிகளுடன் இருந்தாலும், காவல்துறை  அடுத்தடுத்து கைது நடவடிக்கைகளால் வெளியில் வர இயலாத நிலைக்கு ஆளாகி உள்ள ஹரிநாடார்..

இதையடுத்து, எந்நேரமும் ஹரிநாடாரை காவலர்கள் கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.. நடிகை விஜயலட்சுமி அன்றே  மாஜிஸ்திரேட்டிடம் அளித்த  161 வாக்குமூலம் முக்கிய ஆவணமாக இருப்பதாலும், மூன்றாவது குற்றவாளியாக ஹரிநாடார் பெயரும் சேர்க்கப்பட்டிருப்பதால், இந்த வழக்கின் தீவிரம் அதிகமாகும் என்று தான் நம்பப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்