இலங்கையில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக ஆளும் அரசுக்கு எதிராக பொதுமக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் எதிரொலியாக பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச பதவி விலகிய நிலையில் ஐக்கிய தேசிய கூட்டணியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுடன் அதிபர் கோத்தபய ராஜபக்ச பேச்சுவார்த்தை நடத்தினார்.
குறுகிய காலத்திற்காவது பிரதமர் பதவியை ஏற்க வேண்டுமென அதிபர் கோத்தபய ராஜபக்சவின் கோரிக்கையை ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டதையடுத்து நேற்று இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பதவியேற்றார்.மே மாதம் 16 ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறும் நிலையில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான 15 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, சஜித் பிரேமதாச பிரதமராகத் தயாரென அறிவித்திருந்தார் என்பதும் இப்போது தகவல்
கருத்துகள்